இறையாண்மை உள்ள தமிழீழமே தீர்வு ஜெனிவாவில் அங்கயற்கண்ணி பேச்சு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 04 மே 2015 14:22

மனித உரிமைப் பாதுகாப்புக்காகவும், குறிப்பாக இலங்கையில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்கவும் விடாது முயற்சி எடுக்கும் இந்த சிறந்த நிறுவனத்தின் முன்பு உங்களிடம் பேசுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஐக்கிய நாட்டு சபையின் அதிகாரப் பத்திரம் 1945ல் அமலுக்கு வந்தது.இந்த அமைப்பின் ஸ்தாபக ஆவணம், அடிப்படை மனித உரிமைகள், நீதி மற்றும் அமைதி மீது நம்பிக்கை வைத்து, அது எல்லா உறுப்பு நாடுகளாலும் கையெழுத்திடப்பட்டது.

Angayarkanni

ஐக்கிய நாட்டு சபை உருவாக்கப்பட்ட பின் பல உடன்படிக்கைகள் மற்றும் வாரியங்கள் சர்வதேச அமைப்புகளால் ஐக்கிய நாட்டு சபையின் கீழ் பெண்கள் உரிமை சார்ந்த பாலின சமத்துவம் மற்றும் பாகுபாடு, வன்முறை, பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க உருவாக்கப்பட்டது.

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனத்திலிருந்து (1948) பல முக்கிய மனித உரிமைக் கருவிகள் உருவாகியது. இது பாலின அடிப்படையிலான பாகுபாட்டை தடுக்கிறது. இந்த பிரகடனம் வெளிப்படையாக உறுப்பு நாடுகளை கட்டுப்படுத்தும் "அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமை'' போன்ற வார்த்தைகளின் அர்த்தங்களை வரையறுக்கும் நோக்கமுடையது.

உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் விபச்சாரத்திற்காக மற்றவர்களை வாங்குவதை தண்டிக்கும் நோக்கமுடையது.

விபச்சாரத்திற்காக மற்றவர்களை சுரண்டுதல் மற்றும் அதற்கான கடத்தலை ஒடுக்குவதற்கான உடன்படிக்கை கீழ்வரும் வாக்கியத்துடன் தொடங்குகிறது.விபச்சாரம் மற்றும் அதற்கான கடத்தல் வியாபாரத்தினால் வரும் தீய விளைவுகள் மனிதர்களின் சுயமரியாதைக்கும், சுயமதிப்பீட்டிற்கும், நலவாழ்வுக்கும், சமுதாயத்திற்கும் இயைந்து வராத ஒன்று.

இது விலை மாதரின் வன்கொடுமையை தடுப்பதற்கும் மற்றும் விபச்சார நோக்கத்திற்காக மற்றவர்களை வாங்குவதை தண்டிப்பதற்கும் விதிகளை அமைக்கிறது.

போரின்போது பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான ஜெனிவா உடன்படிக்கை, போராளிகள் பொதுமக்களின் மீது வன்முறை உபயோகிப்பதையும், கொலை, சித்திரவதை மற்றும் எல்லாவிதமான பாலியல் வல்லுறவு, மற்றும் பல வடிவங்களான பாலியல் வன்முறைகள் மற்றும் மனிதநேயமற்ற நடவடிக்கைகளையும் தடுக்கக் கோருகிறது.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான உடன்படிக்கையும் சர்வதேச பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைக்கான உடன்படிக்கையும், ஆண்கள், பெண்களிடையே சம உரிமையைக் கோருகிறது.

பெண்களின் மீதான பாரபட்சங்களை இல்லாதொழிக்கும் பிரகடனம் (1967) சொல்கிறது: பெண்களுக்கு எதிரான பாரபட்சம் மற்றும் ஆண்களின் உரிமைகளோடு பெண்களுக்கு குறைந்த உரிமைகள் வழங்குவது மற்றும் உரிமைகளை மறுப்பது அடிப்படையில் அநீதி ஆகும். அது மனித மரியாதைக்கு எதிரான குற்றமாகும்.
பெண்களின் மீதான பாரபட்சங்களை இல்லாதொழிக்கும் உடன்படிக்கை.பாகுபாடு என்பதை இவ்வாறு விளக்குகிறது: எந்த ஒரு அங்கீகாரமும், விளக்குதலும், கட்டுப்படுத்துதலும், பாலியல் அடிப்படையில் செய்வது, மற்றும் அவர்களை பலவீனப்படுத்துதலை நோக்கமாகக் கொண்டு அங்கீகாரத்தை ரத்து செய்வது&<அவர்களின் திருமண நிலைக்கு அப்பாலாகவும் ஆண்கள், பெண்களுக்கான சமத்துவம், மனித உரிமைகள், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, சிவில் தளங்களில் உள்ள அடிப்படை சுதந்திரங்கள்'' பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை இல்லாதொழிக்கும் வாரியம் பாகுபாட்டிற்கு கொடுக்கும் விளக்கத்தில், பெண்களின் வாழ்க்கையில் மேம்பாட்டை வலியுறுத்துகிறது மற்றும் அரசுகளை தங்களது தேசிய அரசியல் அமைப்பு சட்டத்தில் ஆண்கள், பெண்களுக்கான சமத்துவம் என்ற கோட்பாடு இருக்கவேண்டுமென வரையறுக்கிறது.

வியன்னாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் உலக மாநாடு (1993) மனித உரிமை உலகளாவிய இயக்கம் வழியாக பெண்களுக்கு ஒரு மேடை உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான பிரகடனம், பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்கும், ஒழிப்பதற்கும், தண்டிக்கப்படுவதற்குமான ஐணtஞுணூ அட்ஞுணூடிஞிச்ண உடன்படிக்கை (1994) பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயலுக்கான மேடை (1995) சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டம் (1998) ஐக்கிய நாடுகள் தீர்மானங்கள் 1325 (2000) மற்றும் பல்வேறு ஐரோப்பிய உடன்படிக்கைகள், சட்டங்கள்- பாகுபாடு, சமத்துவமின்மை, பாலியல் வன்முறைகளுக்கு எதிரான பெண்களின் உரிமைகளை உறுதி செய்கிறது.

ஆனாலும், பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் ஆயுத சண்டைகளின் போதும், புரட்சிகளின் போதும், ஆட்சிக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின் போதும் அதிகரித்து வருகிறது.

2009ல் இலங்கை இராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் நடந்த இறுதி யுத்தத்தில் லட்சம் தமிழ் பெண்கள் கூட்டுப்பாலியல் வல்லுறவிற்கும், சித்திரவதைக்கும் மற்றும் கொலைக்கும் உட்படுத்தப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கிட்டத்தட்ட பெண்களை அடிமைகளாக நடத்தினர். தங்களின் கால்களை மறைக்காததற்காக பெண்களின் கால்கள் வெட்டப்பட்டன.அக்டோபர் 1996ல் ஒரு பெண் தனது கட்டை விரலில் நகச்சாயம் பூசியதால் அது வெட்டப்பட்டது.

மலாலா யூசஃப்சாய் விஷயத்தில் & தலிபான்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக, பாகிஸ்தானிலுள்ள சுவாட் பள்ளத்தாக்கில் பெண்களின் கல்விக்காக போராடியது ஒரு சிறந்த உதாரணம். மூன்று தோட்டாக்களால் சுடப்பட்ட மலாலா பின்னர் பிழைத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஒரே பாகிஸ்தானியர் ஆவார்.

2011ல் லிபியாவில் மொஹ்மர் அல் கடாஃபியின் துருப்புகள் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், வயகரா போன்ற மருந்துகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.லிபியாவில் பாலியல் வல்லுறவு ஒரு குடும்பத்தின் மீதும், ஒரு சமூகத்தின் மீதான மரியாதைக்கும் எதிரான தாக்குதலாக கருதப்படுகிறது.அது ஒரு நபருக்கு எதிரான தாக்குதலாக மட்டும் கருதப்படுவது இல்லை.எனவே பாலியல் வல்லுறவு, கடாஃபியின் துருப்புகளால் ஆட்சிக்கு துரோகம் செய்பவர்கள் என்று கருதப்படுபவர்கள் மீது உபயோகிக்கப்பட்டது.மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடாஃபி படையினர் போராளிகளின் குடும்ப உறுப்பினர்களின் மீது பாலியல் வல்லுறவை தண்டனையாகவும் உபயோகப்படுத்தியதை ஆவணப்படுத்தியுள்ளது.

பல மாதங்களாக ஐ.எஸ்.ஐ.எஸ்.ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள பெண்களைப் பயங்கரத்திற்கு உட்படுத்தி வருகிறது.அங்கு பாலியல் வன்முறை போரில் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது.ஆயிரக்கணக்கான குர்திஷ் பெண்கள் வடக்கு ஈராக்கில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டு,ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகளால் கொலை செய்யப்பட்டனர்.

இந்த மாபெரும் நிறுவனத்தில் உள்ள உறுப்பு நாடுகளுக்கு தாழ்மையான முறையீடு என்னவென்றால் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க, பாகுபாடு, பாலியல் வன்முறை, கூட்டு வல்லுறவு, சித்திரவதைகளுக்கு& அவர்களை பாதுகாக்க பயனுள்ள சட்ட நடவடிக்கைகளை உபயோகப்படுத்த ஒருமித்த கருத்து வர வேண்டுகிறேன். அமைதி காலத்தில் மட்டுமில்லாமலும், போரின் போதும் ஆயுதப் போராட்டங்கள் நடக்கும் நேரத்திலும் உபயோகப்படுத்த வேண்டுகிறேன்.

ஒரு பதினெட்டு வயது நிரம்பிய ஆண் சாட்சி, திருமதி.யாஸ்மின் சூகாவிடம், தமிழ் பெண்கள் மீது நடந்த சித்திரவதை பற்றி கூறியதாவது: ் பெண்களை அடைத்து வைக்க பயன்படுத்திய அறை தாழிடப்படாமல் சிறிது திறந்திருந்தது. ஒரு பெண் போராளி நிர்வாணப்படுத்தப்பட்டு, தரையில் கிடத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டேன். அவளது பெண் உறுப்பில் சோடா பாட்டில் செலுத்தப்பட்டிருந்தது.அவளது கைகளும், கால்களும் விரிந்த நிலையில் இருந்தது.கதவு சிறிதே திறந்திருந்த காரணத்தால், மீதி இரண்டு பெண்களை பார்க்கமுடியாமல் போனது.எந்த சலனமும் இல்லை, அவர்கள் நகரவும் இல்லை. "இதனை அவர் தன் முடிக்கப்படாத போர்: இலங்கையில் (2009 – 2014) சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும்'' என்கிற அறிக்கையில் ஆவணப்படுத்தி உள்ளார்.

நான் கயல் என்கிற அங்கயற்கண்ணி, தமிழ்ப் பெண் மற்றும் செயல்பாட்டாளராக தமிழ்நாட்டில் இலங்கையிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வருகிறேன். நான் இந்தியாவில் மதிப்புமிக்க நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறேன்.போருக்குப் பிந்திய காலத்தில் இலங்கைக்கான எனது தனிப்பட்ட பயணத்தின் போது. இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் கைகளில் நான் அங்கு ஒரு தமிழ்ப் பெண்ணாக அடையாளம் காட்டப்பட்டு மனிதாபிமானமற்ற சித்திரவதை மற்றும் காவல் தடுப்புக்கு உள்ளாக்கப்பட்டேன்.

நான் ஒரு சுற்றுலா பயணியாய் 2011ல் இலங்கைக்கு சென்றேன். நானும் எனது கணவரும் கைது செய்யப்பட்டு சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு, இலங்கையின் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களத்தில் & தமிழர்களை சித்திரவதை மற்றும் கொலை செய்ய நன்கு அறியப்பட்ட பேர் போன நான்காவது மாடியில் சித்திரவதை செய்யப்பட்டேன். பல்வேறு செயல்பாட்டாளர்களின் அழுத்தத்திற்குப் பிறகு, இந்தியப் பிரதமரின் தலையீட்டினால் சரியான நேரத்தில் விடுதலை செய்யப்பட்டேன். இல்லையென்றால் இந்த மாநாட்டில் பேச இங்கு வந்திருக்க முடியாது.

அப்பயணத்திற்குப் பின்பு போருக்குப் பின்பான இலங்கையில் தமிழ்ப் பெண்களுக்கு எதிரான தாக்குதல் இன அழிப்பு நோக்கங்களுக்காகத் தான் நடைபெறுகிறது என்ற புரிதலுக்கு நாங்கள் வந்துள்ளோம். சர்வதேச அமைப்புகளினால் போருக்குப் பின்பான தமிழர் நிலப்பரப்பில் சர்வதேச கண்காணிப்புக் குழு இல்லாத காரணத்தினால் நான் ஈழத்திலுள்ள தமிழ்ப் பெண்கள் கொடூரமான அநீதிக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்பதை உணர்கிறேன்.

வடகிழக்கில் உள்ள தமிழ்ப் பெண்கள், தங்களது தாயக நிலப்பரப்பில் (90,000 தமிழ் போர் விதவைகள் உள்ளனர்) மனிதாபிமானமற்ற சூழ்நிலையில் கடுமையான இராணுவ மயமாக்கலுக்கு உட்பட்டு, 100 சதவீதம் சிங்கள ஆண்களாக உள்ள இராணுவத்தின் பிடியில் உள்ளனர். இந்த யுத்த விதவைகள் இனப்படுகொலையை இலக்காகக் கொண்டு கட்டமைப்பு மூலோபாய சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.பாலியல் மற்றும் பொருளாதார சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.இந்த சூழ்நிலையில் போருக்குப் பின்னான சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான கண்காணிப்புக் குழு இல்லாத காரணத்தால் மோசமடைகிறது நிலைமை.

நான் திருமதி.ஜெயகுமாரி, மற்றும் அவர்களது 11 வயது பெண் குழந்தையின் வழக்கை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.அவர்கள் தங்களுடைய 15 வயது மகன் போர் 2009ல் நிறுத்தப்பட்ட பின்பு, இராணுவத்தில் கையளிக்கப்பட்ட பின் காணவில்லை.தாயும் பிள்ளையும் போராட்டக் களத்தில் காணாமல் போனவர்களின் சார்பாக முன்நின்று போராடினர்.இது பல்வேறு ஊடகங்களிலும் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் சென்ற வருடம், பிரிட்டன் பிரதம மந்திரி இலங்கைக்கு சென்றதும் வெளிவந்தது.யுத்த விதவையான ஜெயகுமாரியும், அவரது பெண் குழந்தையும் வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து அரசாங்கம் அவரையும் , அவரது பெண் குழந்தையையும் பிரித்து ஏறக்குறைய பதினெட்டு மாதங்களாக புனர்வாழ்வு மையத்தில் அடைத்து வைத்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, யாழ்ப்பாணத்தில் நடந்த பலத்தப் போராட்டங்களுக்கும் பிறகு வெளியில் விட்டனர்.தமிழர்களாகிய நாங்கள் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஏற்படப்போகும் சங்கடத்தை தவிர்க்கவும், இலங்கையும் அதன் கூட்டாளியான அமெரிக்காவும்சேர்ந்துகொண்டு ஐ.நா மனித உரிமை அறிக்கை விசாரணையை தள்ளிப் போடவும் ஜெய குமாரியை விடுதலை செய்தனர் என்று சந்தேகிக்கிறோம்.ஜெய குமாரிக்கு கொடுக்கப்பட்ட நிபந்தனை ஜாமீன் ஒரு தவறான செய்கை என்பதை கவனிக்க வேண்டுகிறேன்.

ஜெய குமாரி முழுமையாக விடுதலை செய்யப்பட வேண்டும், மற்றும் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களுக்காகவும் , சித்திரவதைகளுக்காகவும் நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும். வடகிழக்கில் மெளனமாகத் துன்புறும் பல்லாயிரக்கணக்கான யுத்த விதவைகளுக்காக எங்கள் இதயம் ஏங்குகிறது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் தமிழ் தாய்மார்களின் போராட்டங்கள் தொடர்வது அங்கு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடர்கிறது என்பதை உறுதி செய்கிறது.¬

சர்வதேச முறைகளின் போதாமையாலும், உறுப்பு நாடுகளின் தேவையான நடவடிக்கை குறைபாடுகளாலும் இலங்கையில் சூழ்நிலையை கண்காணிக்கவும், பாதுகாக்கவும் இயலவில்லை.அங்கு தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து இன சுத்திகரிப்பை நடத்துவதற்கு பல்வேறு முறைகள் கையாளப்பட்டு வருகிறது.இது ஐ.நா வின் வரையறைப்படி இனப்படுகொலை என்று வரையறுக்க சர்வதேச உறுப்பு நாடுகள் மறுக்கின்றன.இந்த சர்வதேச உறுப்பு நாடுகளின் செயலின்மை ஒரு பொறுப்பற்ற நடவடிக்கையாகும்.மேலும் 60 வருடகால இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான இனவெறிப்போக்கை ஊக்குவிப்பதாகவும் உள்ளது. நான் உறுப்பு நாடுகளை, மிக நேர்மையான முயற்சி எடுத்து ஈழத்தமிழ்ப் பெண்களிடம் பேச வேண்டுகிறேன்.2009க்கு முன்பு & நான் ஈழத்தமிழ்ப் பெண்களிடம் பேசிய நினைவுகளின்படி அவர்கள் அவமானத்திற்கு உட்பட்டதாக கேள்விப்படவில்லை.அவர்கள் அங்கு நடந்த தன்னாட்சி அரசின் பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்டதாக சொன்னார்கள்.அந்த தன்னாட்சி பிரதேசம் இப்போது முற்றிலுமாக அழித்தொழிக்கப்பட்டுவிட்டது.தமிழ்ப் பெண்கள் இனப்படுகொலை செய்யும் அரசாங்கத்தின் தயவில் இப்போது வாழ்கின்றனர்.அங்கு சிங்கள இன மேலாண்மை தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.எந்த ஒரு தேர்தலும் தமிழர்களுக்கான சம உரிமையை வாக்குறுதியாகக் கொண்டு நடைபெறவில்லை. 2015ல் அதிபர் தேர்தல் அதற்கு ஒரு உதாரணம்.சர்வதேச நாடுகள் துரதிஷ்ட வசமாக அந்த தேசத்தின் கடந்த கால வன்முறையையும், தமிழர்கள் மீது தற்போது நடக்கும் வன்முறையையும் கண்டும் காணாமல் உள்ளனர். திருமதி.யாஸ்மின் சுகாவின் அறிக்கை போருக்கு பின்பும் வலுக்கட்டாயமாக காணாமல் போதல்கள் தொடர்கிறது என்பதை ஆவணப்படுத்துகிறது.இலங்கை அரசாங்கம் காணாமல் போனவர்களுக்கான ஒரு புதிய ஆணைக்குழுவை நியமித்துள்ளது.ஆனால் இலங்கை அரசு கடந்த இரண்டு தசாப்தங்களாக பல்வேறு ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை அமல்படுத்த தவறியுள்ளது.கடந்த ஜனவரி 2014 விசாரணைகளில் இலங்கை இராணுவத்திற்கு எதிராகக் குற்ற சாட்டுதல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் நவம்பர் 2013ல் இருந்து இராணுவ அதிகாரிகள் காணாமல் போனவர்களின் குடும்பத்திலிருந்து தகவல்களைச் சேகரிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோக மனித உரிமை கண்காணிப்பகம் மார்ச் 2014ல் வெளியிட்ட ்நாங்கள் உங்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறோம்'' என்ற அறிக்கை, 75 வழக்குகள் மருத்துவ மற்றும் சட்ட ஆவணங்களின் துணையோடு வெளியிடப்பட்டது. துரதிஷ்டவசமாக உறுப்பு நாடுகளின் தொடர் மெளனத்தாலும்,இலங்கையின் அண்டை நாடுகள் இதை பொது விவாதத்திற்குக் கொண்டு வராததாலும், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு, குறிப்பாக பெண்களுக்கு எதிராகத் தொடர்கிறது.

இதனால்தான் இலங்கையின் வடக்கு மாகாண சபை தெளிவான புரிதலோடு இலங்கை அரசாங்கத்தின் 60 ஆண்டுகால நடவடிக்கையை&தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை குற்றத்தை விசாரிக்க சர்வதேச விசாரணையை கோரி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.அந்த தீர்மானம் தமிழ்ப் பென்கள் மீது நடத்தப்படும் கட்டாய கருத்தடை, இனப்படுகொலையின் கொடூரத்தை ஆவணப்படுத்தி வெளிப்படுத்துகிறது.

அந்த தீர்மானத்தில் & ஆகஸ்ட் 2013ல் அரசாங்க சுகாதார தொழிலாளர்கள் வடமாகாணத்தில் உள்ள வாகைப்பட்டு, கரஞ்சி, வேரவில் போன்ற தமிழ் கிராமங்களில் தாய்மார்கள், அறுவை சிகிச்சையின் மூலம் கட்டாயக் கருத்தடைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதற்கு இணங்காத பெண்கள் எதிர்காலத்தில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளிக்க மறுக்கப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள சுகாதார அமைச்சகம் 2012ல் ஒரு அறிக்கை வெளியிட்டது.அந்த அறிக்கையில் பிறப்புக்கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்பட்ட பெண்கள் முல்லைத்தீவைவிட 30 மடங்கு அதிகமாக உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான முகப்பு குறிப்பிட்டதைப் போல 500 ரூபாய் அல்லது 4 அமெரிக்கன் டாலர்கள் பெற்ற பிறகு அறுவை சிகிச்சை மூலம் கருத்தடை செய்யப்பட்டனர்.
தமிழ் சமூகத்தின் சமூக ஸ்திரத்தன்மை பெண்களின் மீது உள்ளது.பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மீதான தாக்குதல் தமிழ் குடும்பத்தையே முடக்குகிறது.தமிழ்ப் பெண்களை துன்புறுத்துவதன் மூலம் இலங்கை அரசாங்கம் தமிழ் சமூகத்தை தன் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகிறது.தமிழர் பிரதேசம் தமிழ் விதவைகளால் நிரம்பி உள்ளது. தமிழ் விதவைகள்தான் அந்த சமூகத்தின் ஒரே சம்பாதிக்கும் உறுப்பினர்கள். அதுபோக அக்குடும்பத்தின் பொருளாதார சமநிலைக்காகவும் தங்கள் குழந்தைகளை இராணுவத்திலிருந்து பாதுகாக்கவும், காணாமல் போனவர்களுக்காக போராடவும் செய்கின்றனர். அந்த பின்புலத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தங்களுடைய குழந்தைகள் வளருவதும், வேலைவாய்ப்பும் சமூக பாதுகாப்பும் அற்ற சூழ்நிலையிலும் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை மனிதாபிமானமற்ற நிலையில் நகர்த்தப்படுகிறது.

இந்த நிலைமை இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகும் மாறவில்லை; மாறப்போவதுமில்லை.

இந்த புதிய அரசாங்கத்தின் தலைமைகள், தமிழர்களுக்கெதிரான இனப்படுகொலைப் போரில் பங்கேற்றவர்கள்.அவர்கள் திட்டவட்டமாக தமிழர் நிலப்பரப்பிலிருந்து இராணுவத்தை வெளியேற்ற மறுத்துவிட்டனர்.

போருக்குப் பின்பான இக்காலகட்டத்தில், சிங்கள இராணுவம் சிங்களபெளத்த இனவெறியில் ஊறிப்போனதால் நிலைமை இன்னும் மோசமடைகிறது.தமிழர் நிலப்பரப்பிலிருந்து இராணுவத்தை வெளியேற்றாமல், ஆளுனரை மாற்றுவது சர்வதேச அரசுகளை ஏமாற்றும் செயலாகும்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான அரச வன்முறை புதிதாக தோன்றியது அல்ல. இது 60 ஆண்டுகால நடைமுறை. தமிழ்நாடு ஒரு லட்சம் ஈழ அகதிகளை 1983 இனப்படுகொலை வன்முறைக்கு பிறகு குடிகொண்டுள்ளது. சர்வதேச அரசுகள், தங்களுடைய மனித நேய பொறுப்புகளை, ஒவ்வொரு தேசத்திலுள்ள பெண்களை மனதில் கொண்டும், மூன்றாம் உலகத்தில் நடைபெறும் இனப்படுகொலையை அங்கீகரிக்காமல் இருக்கும், தங்களுடைய பழைய நடவடிக்கையை உதறித்தள்ளியும், பின்காலனிய உறுப்பு நாடுகளின் நடவடிக்கைகளை&பெண்களின் கண்ணோட்டத்தில் 60 ஆண்டுகாலமாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் வன்முறையும் அவர்களை உரிமைகளற்று வாழச்செய்கிறது.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயம், இலங்கையில் நடைபெறுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்று தீர்ப்பளித்துள்ளது.சர்வதேச உறுப்பு நாடுகள் ஈழத்தில் உள்ள தமிழ்ப் பெண்களின் அரசியல், சமூக, பாலியல் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென்றும்.அரசியல் செயல்பாட்டாளர்களின் பொதுவாக்கெடுப்பிற்கான குரலை அங்கீகரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.இல்லையேல் தமிழர்களுக்கெதிரான அரச வன்முறை வலுப்படுத்தப்படும்.

சுதந்திர இறையாண்மை உள்ள தமிழீழ தேசமே தமிழீழப் பெண்களுக்கான ஒரே தீர்வும், இறுதித் தீர்வும் ஆகும்.

நன்றி.
(ஐ.நா. மனித உரிமைக் குழுவின் 28ஆவது கூட்டத் தொடரில் 25-03-2015 அன்று பேசியது)

திங்கட்கிழமை, 04 மே 2015 17:34 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.