திங்கட்கிழமை, 04 மே 2015 14:38 |
பத்திரிகை, இலக்கியம், இசை அமைப்பு ஆகிய துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்காக 1917ஆம் ஆண்டு "புலிட்சர்' விருது வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் வாழ்ந்த ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஜோசப் புலிட்சர் என்பவர் அளித்த பெருநிதியின் துணைக்கொண்டு நியூயார்க் நகரிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகம் இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆண்டுதோறும் 21 துறைகளுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இவ்விருது பெறுபவருக்கு சான்றிதழும், 10 ஆயிரம் அமெரிக்க டாலரும் அளிக்கப்படுகின்றன. அத்துடன் தங்கப் பதக்கம் ஒன்றும் அளிக்கப்படுகிறது.
20 உறுப்பினர்களைக் கொண்ட "புலிட்சர்' விருதுக் கழகம் ஒவ்வொரு முறையும் 102 நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. இவர்கள் 21 துறைகளில் விருதுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு துறைக்கும் 5க்கும் குறையாத நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்படும். பரிசுக்குரிய மூவரை ஒவ்வொரு நீதிபதியும் பரிந்துரைக்கலாம். இறுதியாக "புலிட்சர்'விருதுக் கழகம் கூடி பெரும்பான்மையானவர்களின் முடிவின்படி இறுதி முடிவு அறிவிக்கும்.
|
திங்கட்கிழமை, 04 மே 2015 17:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |