தலைமைச் செயலகம் முன் 3 நாள் தொடர் மறியல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 செப்டம்பர் 2015 12:42

தொடக்கப் பள்ளிக் கல்வியில் ஆங்கில வழியைத் திணிக்காதே - தமிழ்வழிக் கல்வியை அழிக்காதே
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 80% வேலை கொடு

- ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து சென்னைத் தலைமைச் செயலகம் முன்பாக ஆகஸ்ட்டு 17, 18, 19 ஆகிய நாட்களில் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில் தொடர் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

முதல் நாள் போராட்டத்திற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். பெ. மணியரசன் முன்னிலை வகித்தார். புலவர் கி.த. பச்சையப்பன், முத்தமிழ் மணி, வடசென்னை மாவட்டத் தலைவர் இலாரன்சு, பா. இறையெழிலன். செந்தில், மே17 திருமுருகன், தமிழ் நேயன், பூங்குன்றன், பேரா. கல்விமணி மற்றும் திரளான தமிழர் தேசிய முன்னணியின் தோழர்கள் பங்கேற்றனர்.

இரண்டாம் நாள் போராட்டத்திற்கு, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் நடைபெற்றது. தியாகு, அருண பாரதி, ஜெயப்பிரகாசு நாராயணன் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

மூன்றாம் நாள் போராட்டத்திற்கு தமிழ்ப்புலிகள் அமைப்பின் நிறுவனர் குடந்தை அரசன் தலைமையேற்றார். மற்றும் பல தோழர்கள் பங்கேற்றனர். இம்மூன்று நாள் நிகழ்விலும் தமிழர் தேசிய முன்னணியின் துணைத் தலைவர் பா. இறையெழிலன் பங்கேற்றார்.

இப்போராட்டத்தில் கீழ்க்காணும் அமைப்புகள் கலந்து கொண்டன. தமிழர் தேசிய முன்னணி, ம.தி.மு.க.,தமிழ்த் தேசியப் பேரியக்கம், மே பதினேழு இயக்கம், இளந்தமிழகம் இயக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழர் முன்னணி, தமிழர் விடுதலைக் கழகம், உலகத் தமிழ்க் கழகம், தென்மொழி அவையம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம், மனித நேய மக்கள் கட்சி, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி, தமிழ்த் தேச மக்கள் கட்சி, காந்தி பேரவை, தமிழ் உரிமைக் கூட்டமைப்பு, மக்கள் கல்விக் கூட்டமைப்பு, மொழியுரிமைக் கூட்டமைப்பு, குமுக விடுதலைத் தொழிலாளர்கள்.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.