1998ஆம் ஆண்டு மக்கள் அளித்த தீர்ப்பு : தமிழ் வழிபாட்டு மொழி - மக்கள் பேராதரவு- வாக்கெடுப்பு முடிவு - பழ.நெடுமாறன் அறிவிப்பு |
|
|
|
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2015 12:16 |
தமிழ்நாட்டுக் கோவில்களில் அர்ச்சனை மொழியாக தமிழ் இருக்க வேண்டுமா? அல்லது சமஸ்கிருதம் இருக்க வேண்டுமா? என்பது பற்றி பக்தர்களின் விருப்பத்தினை அறிவதற்காக முக்கியமான 9 கோயில்களில் 27-11-98 அன்று காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மூன்று மணி நேரம் மட்டுமே நடந்த இவ்வாக்கெடுப்பில் மொத்தம் 18700 பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் தமிழுக்கு ஆதரவாக 17695 பேர்களும், சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக 823 பேர்களும் இரு மொழிகளும் இருக்கலாம் என 182 பேர்களும் வாக்களித்துள்ளனர்.
பதிவான வாக்குகளில் அர்ச்சனை மொழியாக தமிழே இருக்க வேண்டும் என 94.63 சதவிகிதத்தினரும், சமஸ்கிருதத்திற்கு ஆதரவாக 4,40 சதவிகிதத்தினரும் இருமொழிக்கு ஆதரவாக 0.97 சதவிகிதத்தினரும் தீர்ப்பளித்துள்ளனர்.
"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு'' என்பது ஆன்றோர் வாக்கு. மக்கள் அளித்த இந்தத் தீர்ப்பை மதித்து உடனடியாக கோவில்கள் அனைத்திலும் தமிழ் அர்ச்சனை முறையை நடைமுறைக்குக் கொண்டு வருமாறு தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.
மிகமிகப் பெரும்பாலான மக்கள் அளித்த இந்தத் தீர்ப்பைப் பார்த்த பிறகும் தமிழுக்கு எதிராகச் செயல்படுவோர் திருந்தத் தவறினால் மக்களின் கொதிப்பிற்கு ஆளாக நேரிடும் என எச்சரிக்கிறேன்.
|