உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டின் நிறைவு விழா உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக ஆகஸ்ட் 16ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கிறது. மதுரை மாநகரில் உள்ள அரசரடிப் பகுதியில் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற விருக்கும் இம்மாநாட்டில் ஏராளமான தமிழக எழுத்தாளர்களும், வெளி நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
நிகழ்ச்சி நிரல் அன்று காலை 8.30 மணிக்கு நாதசுவர இசையுடன் மாநாடு தொடங்குகிறது. காலை 9 மணிக்கு ஒரத்தநாடு திரு. கணேசன் குழுவினரின் இன்னிசை விருந்து நடைபெறுகிறது.
கொடியேற்றுதல்
மறைந்த தமிழவேள் திரு. பி.டி.இராசன் அவர்களின் புதல்வரும் மதுரை திருவள்ளுவர் கழகத் தலைவருமான கமலத் தியாகராசன் உலகத் தமிழர் கொடியை ஏற்றி வைக்கிறார். மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் மு.ரெ. மாணிக்கம் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
தொடக்கவுரை
தென்னாப்பிரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் மிக்கிச் செட்டி மாநாட்டினைத் தொடக்கி வைத்து உரையாற்றுகிறார். எழுத்தாளர்களின்
சமூகக் கடமைகள் - கருத்தரங்கம்
காலை 11 மணிக்கு எழுத்தாளர்களின் சமூகக் கடமைகள் என்னும் தலைப்பில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கிற்கு முனைவர் க. நெடுஞ்செழியன் தலைமை தாங்குகிறார். முனைவர் தமிழண்ணல் தொடக்கி வைக்கிறார். பேராசிரியர் பர்வீன் சுல்தானா, குருவிக்கரம்பை வேலு, அழகிய பெரியவன், முனைவர் த. செயராமன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். வரவேற்புக் குழுச் செயலாளர் வே.மு. பாண்டி நன்றியுரையாற்றுகின்றார்.
மொழிச் செழுமையில் எழுத்தாளர் பங்கு - கருத்தரங்கம்
இக்கருத்தரங்கிற்கு முனைவர் நடன காசிநாதன் தலைமை தாங்குகிறார். முனைவர் தமிழப்பன் தொடக்கி வைக்கிறார். சூரியதீபன், மலேசியா செம்பருத்தி இதழ் ஆசிரியர் சுப. பசுபதி, முனைவர் இராம. சுந்தரம், மரு. அன்பழகன், முனைவர் பழ. கோமதிநாயகம் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர். வரவேற்புக்குழுச் செயலாளர் ப. சிவக்குமார் நன்றியுரையாற்றுகின்றார்.
நூல்கள் வெளியீட்டு விழா
வரவேற்புக் குழுப் பொருளாளர் ச. சவுந்திரபாண்டியன் தலைமையில் பல நூல்கள் வெளியிடப்படுகின்றன. மதுரை முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் அருணன், மு. பரணன், பறம்பை அறிவன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
எழுச்சி இசை
பிற்பகல் 2 மணிக்கு வரவேற் புக் குழுவின் துணைத்தலைவர் ஜான் மோசஸ் தலைமையில் பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா குழுவினரின் எழுச்சி இசை நடைபெறுகிறது. மாநாட்டு விளம்பரக் குழுத் தலைவர் வே.ந. கணேசன் நன்றியுரை கூறுகிறார்.
தமிழ்வளர்ச்சியில் ஊடகங்களின் பங்கு - கருத்தரங்கம்
இக்கருத்தரங்கிற்கு பொன்னீலன் தலைமை தாங்குகிறார். பெ. மணியரசன் தொடக்கி வைக்கிறார். தியாகு, முனைவர் முத்து குணசேகரன், பேரா. மருதமுத்து, பா. வீரமணி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர். வரவேற்புக்குழுச் செயலாளர் ரெ.ராசு நன்றி கூறுகிறார்.
அயலகத் தமிழர் கருத்தரங்கம்
உலகப்பெருந்தமிழர் காசி ஆனந்தன் இக்கருத்தரங்கிற்கு தலைமை தாங்குகிறார். இலங்கை அமைச்சர் சி. சந்திரசேகரன் தொடக்கி வைக்கிறார். மரு. இந்திர குமார், க. சச்சிதானந்தம், மரு.சத்திய நாதன், முனைவர் வி. கோவிந்தசாமி, கலைச்செல்வன், திருமாவளவன், பாலசுப்பிரமணியம் உட்படப் பலர் உரையாற்றுகின்றனர். இலங்கையின் நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் சேனாதி இராசா, சிவாஜி லிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். மாநாட்டு வரவேற்புக்குழு துணைத் தலைவரான முகமது இஸ்மாயில் நன்றி கூறுகிறார்.
விருது வழங்கும் விழா
உலகப் பெருந்தமிழர் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முனைவர் கு. வேலன் தலைமை தாங்குகிறார். மா.திரவியப் பாண்டியன் தொடக்க வுரையாற்றுகின்றார். முனைவர் ந. அரணமுறுவல், கே.எஸ். இராதா கிருஷ்ணன், தமித்தலட்சுமி, ஆ. நெடுஞ்சேரலாதன், தமிழாலயன் ஆகியோர் விருது பெறவிருக்கும் எழுத்தாளர்களை அறிமுகம் செய்து வைக்கின்றனர். விருதுபெற்று தி.க. சிவசங்கரன், கி.இராஜநாராயணன், எஸ்.பொன்னு துரை, ஜே.வி கண்ணன், வே. தங்க வேலு ஆகியோர் சிறப்புரையாற்று கின்றனர். வரவேற்புக்குழுத் துணைத் தலைவரான வே. கிருட்டிணமூர்த்தி நன்றி கூறுகிறார்.
மாநாட்டுத் தலைமை உரை
இரவு 7 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் மாநாட்டுத் தலைமை உரையாற்றுகின்றார்.
வாழ்த்தரங்கம்
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைமையகச் செயலாளர் இரா.பத்மநாபன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த அரங்கில் சி. மகேந்திரன் தொடக்க உரையாற்று கின்றார். மு. பாலசுப்பிரமணியம், பஷீர் அகமது, இரவிக்குமார், மெல்கியோர், மரு. நா. சேதுராமன், சா. சந்திரேசன், கா. பரந்தாமன், இராசேந்திர சோழன், த. பழமலய், சி.பசுபதி பாண்டியன், குறிஞ்சிக் கபிலன், மா. பொன்னிறைவன், அரப்பா ஆகியோர் வாழ்த்துரையாற்றுகின்றனர். மாநாட்டுச் செயலாளர் பிச்சைக்கணபதி நன்றியுரை கூறுகிறார். மாநாட்டு நிகழ்ச்சிகளை மருத்துவர் முத்துசெல்வம், புலவர் சுப. இராமச்சந்திரன், பேரா.அறிவரசன் ஆகியோர் தொகுத்துரைப்பார்கள்.
மாநாட்டுப் பணிகள்
மு.ரெ. மாணிக்கம் தலைமை யில் இயங்கும் வரவேற்புக் குழுவினர் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள் ளனர். பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. நிதிக்குழுவின் தலைவராக கா. பரந்தாமன், விளம்பரக் குழுவின் தலைவராக வே.ந. கணேசன், விருந்தோம்பல் குழுவின் தலைவராக பழ. தமிழ் மாறன், தொண்டர் படைக் குழுவின் தலைவராக மு. அழகர் சாமி ஆகியோர் தலைமையில் குழுவினர் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
விழாக்கோலம்
மதுரை மாநகரம் முழுவதும் மாநாட்டினையொட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகத் தமிழர் கொடி கள் பறக்கவிடப்பட்டுள்ளன. மாநாட் டிற்காக சுவர் விளம்பரங்கள், மற்றும் சுவரொட்டிகள் ஏராளமாக காட்சி தருகின்றன. தமிழ் வளர்த்த மதுரையில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு உலகளாவிய தமிழர் மாநாடு நடைபெற இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளானவர்கள் இந்த மாநாட்டிற்கு வரவிருக்கிறார்கள்.
|