ரமேஷ் படுகொலை - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 20 ஜூலை 2013 12:09
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டிருக்கிற நிகழ்ச்சி அதிர்ச்சியைத் தருகிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் அரசியல் ரீதியான படுகொலைகள் தமிழகத்தின் பொதுவாழ்வை கேள்விக்குறியாக்கியுள்ளன.
அரசியல் கட்சித் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்ற நிலை உருவாவது அபாயகரமானது. கருத்து வேறுபாடுகளை கொலைகளின் மூலம் தீர்க்க முடியாது. அவ்வாறு கருதினால் அது நாட்டில் அராஜகத்தையே தோற்றுவிக்கும். இத்தகையப் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையாகும்.
படுகொலை செய்யப்பட்ட ரமேஷ் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு குற்றம் செய்த கொலையாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
புதன்கிழமை, 24 ஜூலை 2013 16:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.