'தென்செய்தி" அன்பர்களுக்கு வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜனவரி 2021 14:35

கடந்த 22ஆண்டுகாலமாகத் தமிழர்களின் பேராதரவோடு தென்செய்தி இதழ் மாதந்தோறும் 1, 15 ஆகிய நாட்களில் தவறாமல் வெளிவந்துகொண்டிருந்தது. அச்சிதழ் வடிவத்திலும், இணைய இதழ் வடிவத்திலும் தொடர்ந்து வெளியிடப்பட்டது.

இந்தியாவுக்கு வெளியே உலக நாடுகளில் வாழும் தமிழர்கள் இணைய இதழ் வடிவத்தில் வெளிவந்த தென்செய்தி இதழைப் படித்து மகிழ்ந்தனர்.

தமிழ்நாட்டிலும், பிற மாநிலங்களிலும் வாழும் தமிழர்கள் அச்சிதழ் வடிவத்தில் தென்செய்தியைப் படித்து மகிழ்ந்தனர். தென்செய்தியில் வெளிவந்த கட்டுரைகளை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வெளிவரும் பல இதழ்கள் மறுபிரசுரம் செய்து மகிழ்ந்தன.

உலக நாடுகளை அச்சுறுத்திய கொடிய கொரோனா நோய்த் தொற்றுக் காலகட்டத்தில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட சூழ்நிலையில் அச்சிடுவது, அஞ்சலில் அனுப்புவது போன்றவை முடங்கிவிட்டதால், கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி தென்செய்தி மாதம் இருமுறை இதழ் இணைய வடிவத்தில் மட்டுமே தொடர்ந்து மாதந்தோறும் 1, 15 ஆகிய நாட்களில் வெளிவந்துகொண்டிருந்தது.

இந்தச் சூழ்நிலையில் இனி 15-01-2021 முதல் தென்செய்தி இதழ் தொடர்ந்து இணைய இதழாக மாதந்தோறும் 1, 15 ஆகிய நாட்களில் தவறாது வெளிவரும். இதழ் அன்பர்களுக்கும், ஆதரவு அளித்த தமிழ் மக்களுக்கும் எமது உளம்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தென்செய்தி இணைய இதழ் கீழ்க்கண்ட இணையதள முகவரியில் அனைவரும் இலவயமாகப் படித்தும், படியெடுத்து வைத்தும் மகிழலாம். கடந்த 22ஆண்டுகாலமாகத் தொடர்ந்து பேராதரவுத்தந்த புரவலர்கள், ஆண்டு நன்கொடையாளர்கள், விளம்பரங்கள் கொடுத்து உதவியவர்கள், மாற்றிதழ்களை அனுப்பிய இதழாசிரியர்கள் ஆகிய அனைவருக்கும் உளம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதோடு, தொடர்ந்து இணைய வடிவத்தில் வெளிவரும் தென்செய்தி இதழுக்கு நல்லாதரவினை நல்கும்படிவேண்டுகிறோம்.

இணையதளம்:

http://thenseide.com

-பழ. நெடுமாறன்

ஆசிரியர்.

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021 14:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.