மே-18 தமிழினப் படுகொலை நாள் - 14ஆம் ஆண்டு நினைவேந்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஜூன் 2023 11:40

18.05.2023 வியாழன் அன்று மாலை 5 மணியளவில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலை நாள், 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான மக்கள் திரண்டிருந்தனர்.

may 18 reduce

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைப்பின் துணைத் தலைவர்கள் சி. முருகேசன், சா. இராமன், பேரா. த. செயராமன், வழக்கறிஞர் த. பானுமதி, பொதுச்செயலாளர் ந.மு. தமிழ்மணி, செயலாளர் து. குபேந்திரன் மற்றும் பேரா. வி. பாரி, பேரா. முரளிதரன், சு. பழனிராசன், அ. நல்லதுரை, இமைநெறி இமயவன், சுப. இளவரசன் ஆகியோர் உரையாற்றினர். பழ. நெடுமாறன் நிறைவுரையாற்றினார். பொதுச் செயலாளர் ஜோ. ஜான்கென்னடி நிகழ்ச்சியை முறைப்படுத்தினார்.

மாலை 6.30 மணிக்கு முற்றத்தின் முன் அனைவரும் திரண்டனர். மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த இருவர் ஈகச் சுடர் ஏற்றினர். பங்கேற்ற அனைவரும் மெழுகுவர்த்திகளை ஏற்றி உயிர்நீத்த ஈகிகள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தினர்.

சனிக்கிழமை, 03 ஜூன் 2023 16:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.