தமிழர்களின் போராட்டம் ஏன்? |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 07 அக்டோபர் 2014 13:29 |
21.1.2000 அன்று வெளியான "இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழில் "இலங்கையில் உள்நாட்டுப் போர்' என்ற தலைப்பில் ஏ.பி.வெங்கடே சுவரன் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"1972ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கைக் குடியரசின் அரசியல் சட்ட யாப்பு தமிழர்களை அடியோடு புறக்கணித்தது. வட-கிழக்கு மாநிலத்தில் தமிழை ஆட்சி மொழியாக ஆக்குதல், கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை அடியோடு ஏற்க மறுத்ததன் மூலம் தமிழர்களுக்கு அதிகாரம் எதனையும் வழங்கச் சிங்கள அரசு முன்வரவில்லை. சிங்களத்தை ஆட்சிமொழி ஆக்கவும் புத்த மதத்திற்கு முதன்மை கொடுக்கவும் அந்த அரசியல் சட்டம் முன்வந்தது. நாட்டில் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் தமிழ் பேசுபவர்களாகவும் நான்கில் ஒரு பகுதி மக்கள் இந்து-முஸ்லீம்-கிறித்துவ மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பதையும் அந்தச் சட்டம் கொஞ்சமும் மதிக்கவில்லை.’இத்தகைய வேறுபாடான நடவடிக்கைகளின் மூலம் தமிழர்கள் தங்களின் மீட்சிக்காக எதிர்த்துப் போராடும் சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டார்கள்' என மிகத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கருத்தை அவர் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார் என்பது பாராட்டத்தக்கதாகும்.
|