தினமணி நாளிதழில் கலா இரசிகன் பாராட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2015 13:17

ஐயா, பழ.நெடுமாறன் "தினமணி' நாளிதழின் நடுப்பக்கத்தில் எழுதிய கட்டுரைகள் ஏழு தொகுப்புகளாக வெளியிடப் பட்டிருக்கின்றன. இதில் வெளியாகி இருக்கும் அத்தனை கட்டுரைகளுமே, அச்சுக்குப் போவதற்கு முன்னாலேயே வந்த சூட்டுடன் என்னால் படிக்கப்பட்டவை. நெடுமாறன் ஐயா கட்டுரையில் ஒரு வார்த்தையைச் சேர்க்கவோ நீக்கவோ முடியாது என்பதை அனுபவ ரீதியாக அறிந்தவன் நான். அந்த எழுத்துக்குத்தான் என்ன வலிமை! என்ன வீச்சு...!

ஒவ்வொரு கட்டுரையிலும் ஐயா. பழ.நெடுமாறனின் பழுத்த அரசியல் அனுபவமும், ஆழ்ந்த தெளிந்த, சமுதாயக் கண்ணோட்டமும், தெளிந்த தேர்ந்த சிந்தனையும் பளிச்சிடுகின்றன என்பதுதான் தனிச்சிறப்பு. இந்த எழு தொகுதிகளையும் மறுபடியும் படித்தபோது, புதியதாகப் படிப்பது போன்ற சிலிர்ப்பு, எத்தனை எத்தனை பிரச்னைகள் பற்றி அவர் "தினமணி' நாளிதழில் எழுதி இருக்கிறார் என்பது மலைப்பாக இருக்கிறது.

மலைபோல உயர்ந்த தலைவன், மலைப்பை ஏற்படுத்தும் மனிதன்! அவருடைய எழுத்துக்கள் மலைப்பை ஏற்படுத்துவதில் வியப்பென்ன இருக்கிறது.

- தினமணி 05-04-2015

 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.