தென்செய்தி
தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு மலர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 15:53

தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு மலர்
மறைமலையடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தின்
தோற்றம், வரலாறு, போராட்டங்கள், பங்கேற்ற தமிழறிஞர்கள், பாவலர்கள்
ஆகியோரைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள், பாக்கள்
பழைமைச் சிறப்பு வாய்ந்த படங்கள் அடங்கிய
தமிழர்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய பொன்மலர்

 
தமிழ்த் தெருவில் தமிழ் இல்லை! - பாவேந்தர் பாரதிதாசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 15:51

வாணிகம் தம் முகவரியை
வரைகின்ற பலகையில்
ஆங்கிலமா வேண்டும்?
வானுயர்ந்த செந்தமிழால்
வரைக என அன்னவர்க்குச்
சொல்ல வேண்டும்!

 
சமற்கிருதப் பிடியிலிருந்து தமிழை மீட்டார் மறைமலையடிகள் - ஆங்கில ஆளுமையை அகற்றிவிட அணி திரள்வோம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 06 ஜூலை 2016 16:31

ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் மொழியையும், பண்பாட்டையும் அழிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த இனம் சிறிது சிறிதாக மறைந்தே போகும்.

தொல்காப்பியர் காலத்தில் தொடங்கி நமது தமிழை அழிக்க வடமொழி இடைவிடாமல் முயன்று வந்திருக்கிறது. சங்க நூல்களில் வடமொழிச் சொற்கள் மிகக்குறைவு. சங்க காலத்தையொட்டி தொடர்ந்த காலக் கட்டத்தில் தமிழில் கலக்கப்பட்ட வடமொழி சொற்களின் தொகை நாளுக்கு நாள் மிகுந்துகொண்டே வந்து மணிப்பிரவாள நடையாக மாறி 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழில் நூற்றுக்கு 70 சதவிகிதத்திற்கு மேல் வடசொற்கள் கலந்து செந்தமிழின் சிறப்பைச் சிதைத்துவிட்டன.

 
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 00:00

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு - உலகத் தமிழர் பேரமைப்பு 9ஆம் மாநாடு
அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், (பழைய பேருந்து நிலையம் அருகில்) தஞ்சை.

 
எஸ்.வி.ஆர். ஆவணப் படத்திற்குத் தடை - கருத்துரிமை மீதான கடும் தாக்குதல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 06 ஜூலை 2016 16:28

"உன்னுடைய கருத்தை வரிக்கு வரி நான் மறுக்கின்றேன். ஆனல், அந்தக் கருத்தை நீங்கள் வெளியிடுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்காக எனது உயிரையும் தர ஆயத்தமாக இருக்கிறேன்'' என்றார் வால்டேர். ஓர் உண்மையான சனநாயகத்தில் இத்தகைய ஆரோக்கியமான அணுகுமுறைதான் இருக்க வேண்டும்.ஆனால் நிலவும் சமூக வெளியில் தனக்கு உவப்பாக இல்லாத கருத்தை ஒருவர் வெளியிடுவதை ஒரு சிறிதும் சகித்துக்கொள்ள முடியாத அவல நிலைதான் தமிழகத்தில் நடைமுறையாக உள்ளது. இதன் வெளிப்பாடுதான் 2016 சூன் 4ஆம் நாள் சென்னையில் "இடது' காலண்டிதழ் சார்பாக வெளியிடப்படுவதாக இருந்த மனித நேயப் போராளி தோழர் எஸ்.வி.ஆர். என்னும் ஆவணப்படத்திற்குக் காவல்துறையினரால் மிக அவசரமாக விதிக்கப்பட்ட தடையாகும்.

 
«தொடக்கம்முன்61626364656667686970அடுத்ததுமுடிவு»

பக்கம் 64 - மொத்தம் 78 இல்
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.