தமிழர்களின் 60 ஆண்டு காலக் கனவுத் திட்டமான குளச்சல் - இணையம் துறைமுகம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கானத் திட்டம் |
|
|
|
சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 12:46 |
1. இந்தியாவில் உள்ள முக்கியத் துறைமுகங்கள் அனைத்தும் செயற்கைத் துறைமுகங்கள். குறிப்பிட்டக் கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் கடலுக்கு அடியில் அகழ்வுப் பணி செய்து ஆழப்படுத்த வேண்டும்.
2. 16 மீட்டர் மிதவை ஆழமுள்ள சரக்குப் பெட்டகக் கப்பல்களைக் கையாளும் நவீன துறைமுகங்கள் எதுவும் இந்தியாவில் இல்லை.
3. மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கிடையே கடல் போக்குவரத்து வழியில் இந்தியத் துறைமுகங்கள் எதுவும் இல்லை. சென்னை, தூத்துக்குடி, விசாகபட்டினம், கொச்சி, மும்பை, கல்கத்தா போன்ற பெருந் துறைமுகங்கள் இந்த கடல் வழியிலிருந்து தொலைவில் அமைந்துள்ளதால் சர்வதேச சரக்குக் கப்பல்கள் இத்துறைமுகங்களுக்கு வந்து செல்வதில்லை.
|
|
கூர் தீட்டப்படும் வாள்கள் - கவிஞர் தமித்தலட்சுமி |
|
|
|
சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 12:45 |
மந்திகள் கூட்டத்தில் மலர் மாலையாய் ஏன் நின்றாய்?
|
தண்ணீரை முற்றிலுமாகத் தடுப்பதே நோக்கம் - பழ. நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:40 |
"பொது மேற்பார்வைக் குழுவின் கட்டுப்பாட்டிலும், தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் கருநாடக அரசு புதிய அணை கட்டிக்கொள்ளலாம், அணைப் பராமரிப்பு, நீர் திறப்பு உள்ளிட்டவற்றை பொது மேற்பார்வைக் குழுவே செய்ய வேண்டும்'' என உச்சநீதிமன்றம் 17-8-2017 அன்று தெரிவித்துள்ள கருத்து தமிழ்நாட்டு விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பல்வேறு கட்சித் தலைவர்களும் விவசாய சங்கங்களின் தலைவர்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இக்கருத்தைத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு காவிரிப் பிரச்சினையின் கடந்த கால வரலாற்றினை தமிழகம் சார்பில் வாதாடியவர்கள் சரிவர எடுத்துச்சொல்லவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது.
|
|
இன்று அவரை விட்டால் வேறு தலைவர் இல்லை! ஜüனியர் விகடன் இதழில் வெளிவந்த மதிப்புரை |
|
|
|
சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 12:43 |
காமராசர் இறந்து 42 ஆண்டுகள் ஆகப்போகிறது. ஆனாலும், "காமராசர் ஆட்சி அமைப்போம்' என்ற முழக்கம் இன்னமும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. இதற்குக் காரணம் அவரது தியாகம், எளிமை, நேர்மை, தூய்மை. அவருக்குப் பின்னால் நடந்த அரசியலில் இந்த நான்கும் இல்லாமல் போனதால்தான் காலங்கள் கடந்தும் ஏக்கத்துடன் கவனிக்கப்பட வேண்டியவராக காமராசர் இருக்கிறார். அவரைப் பற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தமிழில் வந்துள்ளன. "இதோ, மேலும் ஒரு புத்தகம்' என்று இதை ஒதுக்க முடியாது. ஏனென்றால், "பெருந்தலைவரின் பெருநிழலில்' வளர்ந்த பழ. நெடுமாறன் எழுதியிருப்பதால், இது நேரடி சாட்சியம்.
|
கதிராமங்கலம் போராளிகள் பிணையில் விடுதலை |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:36 |
கதிராமங்கலம் காக்கப் போராடியதற்காகப் பொய் வழக்குகள் புனையப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச் சுடர் மற்றும் கதிராமங்கலம் தோழர்கள் கா. தருமராசன், இரா. முருகன், சு. சிலம்பரசன், ரெ. செந்தில்குமார், சே. சந்தோஷ், ப. சாமிநாதன், கோ. ரமேஷ், இரா. வெங்கட்ராமன் ஆகிய 10 தோழர்கள் 11-08-2017 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
|
|
|
|
|
பக்கம் 79 - மொத்தம் 119 இல் |