இளங்குமரன் தாயார் மறைவு பழ. நெடுமாறன் இரங்கல் செய்தி |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:32 |
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும் தலைவர் பிரபாகரன் அவர்களின் ஆரம்பக் காலத் தோழரும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளராகப் பணியாற்றியவருமான பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன் அவர்களின் அன்னை செல்வநாயகி நடராசா அவர்கள் மறைந்த செய்தி அனைவருக்கும் வேதனை அளிக்கும் செய்தியாகும்.
தமிழீழம் சென்றிருந்தபோது அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஏழ்மையான அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய தனது மூத்த மகன் இயக்கத் தொண்டாற்றி வருவதில் அவருக்குப் பெருமிதம் இருந்தது. போரின் முடிவில் இளங்குமரன் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டார். அவர் நிலை என்னாயிற்று என்பது தெரியாத துயரத்தோடு வாழ்ந்து வந்த அம்மையார் அந்த ஏக்கத்தோடு மறைந்திருக்கிறார். அந்த வீரத்தாய்க்கு தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். |
|
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:29 |
"தமிழீழம் அமையும் வரை சட்டை போடமாட்டேன்'' என்று சூளுரைத்து கடந்த 20 ஆண்டு காலமாக சட்டையில்லாமல் வாழ்ந்து வந்த தோழர் உண்மை விரும்பி அவர்கள் 25-12-2015 அன்று கோவூரில் காலமானார் என்ற செய்தியை அறிய மிக வருந்துகிறோம்.
|
கரம் கோர்ப்போம் - துயரத்தைத் துடைப்போம் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:23 |
தமிழக வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு அடைமழையும் கரைபுரண்ட வெள்ளமும் சென்னை மாநகரத்தையும் மற்றும் திருவள்ளுர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களையும் சீர்குலைத்துவிட்டன.
சென்னை நகரில் மட்டும் குடிசை வாழ் 18 இலட்சம் மக்கள் எல்லாவற்றையும் இழந்து அரசு முகாம்களில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இம்முறை வெள்ளத்தில் நடுத்தர மக்களும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களின் வீடுகளில் இருந்த மதிப்புமிக்கப் பொருட்களுமே வெள்ளத்தில் வீணாகியோ, அடித்துச் செல்லப்பட்டோ விட்டன. இவர்களின் எண்ணிக்கை 40 இலட்சத்திற்கு மேல் இருக்கும். இவர்களின் பொருள் இழப்பு பல நூறு கோடிகளைத் தாண்டி நிற்கும்
|
|
செவ்வாய்க்கிழமை, 05 ஜனவரி 2016 15:27 |
"நெஞ்சத்தில் நிழலாடும் தலைவர்கள்' என்னும் தலைப்பில் கல்கி தீபாவளி மலரில் வெளியான கட்டுரையில் நான் கூறியதற்கு மாறான செய்தி வெளியாகியுள்ளது. அதை சரிவர கவனிக்காமல் தென்செய்திலும் அந்தத் தவறு இடம் பெற்றுவிட்டதற்காக வருந்துகிறேன். கீழ்க்கண்டவாறு அதைத் திருத்தி வாசித்துக்கொள்ள வேண்டுகிறேன்.
|
பாசிசத்தை வீழ்த்த கைகோர்ப்போம் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 23 ஜூன் 2015 12:41 |
இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருப்பது என்பது ஒரு சாதாரண ஆட்சி மாற்றம் அல்ல. மாறாக கடுமையான மதவெறியும் - பாசிசத் தன்மையும் பிற்போக்குத் தன்மையும் கொண்ட ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது.
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடியை முன்னிறுத்தி பணத்தை வாரியிறைத்து வெற்றிபெற வைத்தன.. அதே நிறுவனங்கள் அவரது ஆட்சியைத் தாங்கிப்பிடிக்க தங்களது முழு வலிமையையும் பயன்படுத்துகின்றன.
|
|
|
|
|
பக்கம் 118 - மொத்தம் 119 இல் |