தென்செய்தி
கா. பரந்தாமன் நினைவேந்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:45

தமிழர் தேசிய முன்னணியின் மூத்த பொதுச்செயலாளர் கா. பரந்தாமன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 23-7-17 ஞாயிறு அன்று மதுரை பால்மீனாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அனைவரையும் வெ.ந. கணேசன் வரவேற்றார். எம்.ஆர். மாணிக்கம் தலைமை தாங்கினார். திரு. சி.சி. சாமி, ஜி.எஸ். வீரப்பன், துரை. மதிவாணன், தி. பழனியாண்டி, சி. முருகசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கா.  பரந்தாமன் படத்தினை பழ.நெடுமாறன் திறந்து வைத்து உரையாற்றினார்.

 
நூல் மதிப்புரை படித்தேன்! படியுங்கள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:41

"ஊரின் நடுவே அழகான குளம். தாமரையும் அல்லியும் பூத்துக் கிடக்கின்றன. பூக்களின் மீது வண்டுகளும், தேனீக்களும், தேன்சிட்டுகளும் ரீங்கரிக்கும். மீன் குஞ்சுகளைக்  கவ்வ நீர்ப்பறவைகளும் வருகின்றன. குளத்தின் அழகு மனதைக் கவர்கிறது. ஆனால் நீரின் அடியில் கிடப்பது சகதியும் மலர்களின் தண்டுகளும்தான். இவை மலர்களின் அழகிற்கு ஆதாரம். குளத்தின் அடியிலுள்ள சேற்றை யாரும் விரும்புவதில்லை.  அது மக்களுக்கு எந்தப் பயனும் தருவதில்லை. அந்த சேற்றைப் போன்றதுதான் என் வாழ்க்கை.'' என "லட்சுமி என்னும் பயணி' என்று எழிலுறத் தொடங்கும் இந் நூலில்  நெகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றுள்ளன.

 
வீர. சந்தானம் நினைவேந்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:36

தமிழ்த்தேசியப் போராளி ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 31-7-17 அன்று சென்னை சந்திரசேகர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு இரா. நல்லகண்ணு தலைமை தாங்கினார். பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். ஓவியர் வீர.சந்தானம் அவர்களின் படத்தினை வைகோ திறந்து வைத்தார்.  இயக்குநர் கெளதமன் தொகுப்புரை வழங்கினார். கவிஞர்கள் உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், அறிவுமதி, தஞ்சாவூர்க் கவிராயர், பழனிபாரதி, யுகபாரதி, பச்சியப்பன், ஜெயபாஸ்கரன், இளையகம்பன், கவி பாஸ்கர்  ஆகியோர் உரையாற்றினர்.

 
பேராசிரியர் பத்மானந்தன் மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:38

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

என வள்ளுவப் பேராசான் வடித்த இலக்கிய வரிகளுக்கு இலக்கணமாக கடந்த 60 ஆண்டு காலத்தில் உள்ளன்போடும் அகத்தின் மலர்ச்சியோடும் நட்புறவு கொண்டிருந்த  எனது இனிய நண்பர் பேராசிரியர் இரா. பத்மானந்தன் 26-7-2017 அன்று காலமான செய்தியை அறிந்தபோது துயரத்தால் துடித்துப்போனேன்.

 
ஏமாற்றும் நாடகம் தொடர்கிறது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:30

இலங்கையில் நடைபெற்ற போருக்கு முன்பும் பின்புமாக காணாமல் போனவர்கள் குறித்த சட்டத்தில் குடியரசுத் தலைவர் சிறீசேனா கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம்  இலங்கையில் நிலையான அமைதி நிலவுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும் 21-7-17 அன்று தெரிவித்துள்ளார். ஆனால், நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்ட பிறகே அதற்கு சிறீசேனா ஒப்புதல் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

 
«தொடக்கம்முன்81828384858687888990அடுத்ததுமுடிவு»

பக்கம் 81 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.