தென்செய்தி
நற்றமிழ்த் தேசியம் வெற்றிபெற... - பேராசிரியர் அறிவரசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 15 ஜூன் 2017 12:16

தெள்ளு தமிழைக் காப்பதற்கும்
தேசிய உரிமை மீட்பதற்கும்
நல்ல ஈழ விடுதலைக்கு
நற்றுணை யாக நிற்பதற்கும்
வெள்ளம் போல தமிழரெலாம்
வேற்றுமை மறந்து திட்டமிட்டுக்
கொள்கை வழியில் ஒன்றுபட்டுக்
குறிக்கோள் வெல்லச் செயற்படுவோம்.

 
தனிமைப்படுத்தப்பட்டுத் தவிக்கும் இந்தியா! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 மே 2017 14:30

"இலங்கைக்கு உற்ற நண்பனாகவும், உண்மையான கூட்டாளியாகவும் இந்தியா என்றென்றும் விளங்கும். இலங்கையில் உள்ள நமது சகோதரர்களும் சகோதரிகளும் வளமான வாழ்வுபெறவும், முன்னேறிச் செல்லவும் தேவையான பொருளாதார மற்றும் சமுதாய வளர்ச்சிக்கானத் திட்டங்களுக்கு இந்தியா உறுதியாக உதவும்.'' என இந்தியத் தலைமை அமைச்சர் மோடி மே 12 அன்று கொழும்பில் கூடியிருந்த பெருங்கூட்டத்தில் வாக்குறுதி வழங்கினார்.

மூன்று நாட்கள் கழித்து மே 15ஆம் நாள் சீனாவின் தலைநகரான பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச பொருளாதார வழித்தட மாநாட்டில் பங்குபெற இந்தியா மறுத்துவிட்டது. தனது இறையாண்மையை சீனா மதிக்கவில்லை என இந்திய அரசு குற்றம்சாட்டியது. ஆனால் இந்தியா பங்குபெற மறுத்த மாநாட்டில் இலங்கை மிகுந்த மகிழ்ச்சியுடன் பங்கேற்றுள்ளது.

 
மலையகத் தமிழர் கேட்பது சமஉரிமையே-வீடு அல்ல! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 மே 2017 14:21

அண்மையில் இலங்கை சென்ற பிரதமர் மோடி அவர்கள் மலையகத் தமிழர்கள் கூட்டத்தில் பேசும்போது "உங்களது மூதாதையர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தனர். இந்த நேரத்தில் தமிழறிஞர் கணியன் பூங்குன்றனார் பாடிய "யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற பாடல்களை நினைவூட்டுகிறேன். ஒவ்வொரு ஊரும் உங்களது ஊரே. இலங்கையும் உங்களது ஊரே. இலங்கையில் வாழும் சிங்களர்கள்-தமிழர்கள் ஒற்றுமையின் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்த வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரான மலையகத் தமிழர்களின் வாழ்வாதார நிலைகளை மேம்படுத்த இலங்கை அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் இந்தியா முழுமையான ஆதரவு அளிக்கும். மலையகத்தமிழர்களுக்கு ஏற்கெனவே 4 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக்கொடுத்துள்ளது. மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்தியா கட்டிக் கொடுக்கும்'' எனக் கூறியுள்ளார்.

 
பாழாகும் தமிழ்நாடு - பேரா. பீம. தனஞ்செயன், விழுப்புரம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 மே 2017 14:27

ஏரிகள் வயல்வெளி பனந்தோப்புகள் அழிந்தன
நகர வளர்ச்சி. ஒரு லிட்டர் குடிநீர் பத்து ரூபாய்
வீராணம் வறண்டு கெஞ்சுகிறோம் ஆந்திராவிடம்.
நமது சென்னை மாநகரம்; அசுத்தப் பட்டியலில் மூன்றாமிடம்
ஏரிகள் யாவும் தரைமட்டம்; வீடுகளாய்!
பாலாறு வறண்டு மணல் சுரண்டல்!

 
தூத்துக்குடியில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா... PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 31 மே 2017 14:19

21-5-17 அன்று தூத்துக்குடி கைலாசு திருமண மண்டபத்தில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா தமிழ் அமைப்புகளின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு வந்திருந்தோரை திரு.ச. அழகு வரவேற்றார்.

திரு. அ. திருச்சிற்றம்பலம் விளக்கேற்றிவைத்தார். தமிழர் தாயகம் இதழ் ஆசிரியர் பேரா. மு.செ. அறிவரசன் தலைமை தாங்கினார். விழா ஒருங்கிணைப்பாளர் ஈ. சங்கரநாராயணன் நிகழ்ச்சிகளை சிறப்பாகத் தொகுத்துரைத்தார்.

 
«தொடக்கம்முன்81828384858687888990அடுத்ததுமுடிவு»

பக்கம் 85 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.