|
மோடி யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் - பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00 |
புத்த மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லவிருக்கும் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கும் சென்று அங்குள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும். 2012ஆம் ஆண்டில் காமன்வெல்த் அதிபர்கள் மாநாடு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் யாழ்ப்பாணம் சென்று தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து இலங்கை அதிபரிடம் தனது கண்டனத்தை நேரில் தெரிவித்தார்.
|
உலகப் பெருந்தமிழர் - இரா. செழியன் 95ஆவது பிறந்த நாள் விழா |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00 |
தஞ்சை மாவட்டத் திருக்கண்ணபுரத்தில் 28.04.1923 அன்று இராசகோபால் - மீனாட்சிசுந்தரம் இணையர்க்குப் பிறந்தவர் இரா. செழியன் அவர்கள்.
1939ஆம் ஆண்டு பள்ளி இறுதி வகுப்பில் தங்கப் பதக்கம் வென்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகக் கணிதத் துறையில் 1944ஆம் ஆண்டு பி.எஸ்சி., ஆனர்சு படிப்பில் முதல் மாணவராகத் தேறினார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு இரா. செழியன் அவர்களும், அவரது அண்ணன் நாவலர் இரா. நெடுஞ்செழியன் அவர்களும் அறிஞர் அண்ணா மீது ஈடுபாடு கொண்டு, 1949ஆம் ஆண்டு அவர் தொடங்கிய தி.மு.க.வில் இணைந்தார்கள். அண்ணாவின் நம்பிக்கைக்குரியவராகவும், நெருக்கமானவராகவும் அவர் திகழ்ந்தார். அண்ணா நடத்திய திராவிட நாடு இதழிலும், இரா. நெடுஞ்செழியன் நடத்திய மன்றம் இதழிலும் தமிழைப் பற்றியும், பண்டைத் தமிழர் பண்பாடு குறித்தும் செழியன் தொடர்ந்து எழுதினார்.
|
|
தமிழ் பக்தியின் மொழி - மா. க. ஈழவேந்தன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00 |
எங்கும் நிறைந்தவன் இறைவன். எல்லாம் வல்லவன் இறைவன் என்று பேசுகிறோம். அந்த கடவுளுக்கு தமிழ் தெரியுமா? என்று கேட்கும் நிலையில் இன்னும் சில தமிழர்கள் இருப்பதை எண்ணி ஏங்குகிறோம்.
செந்தமிழ் உடல் சிவநெறி உயிர் என்கிறோம். ஆனால் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழைக் காண்பது அரிதாக இருக்கிறது. திராவிடக் கட்டிடக்கலை , திராவிட சிற்பம், திராவிட ஓவியம் என்றெல்லாம் பெருமை பேசுகின்ற நாம் அதே கோயிலில் தமிழுக்கு இடம் இல்லையென்றால் இதன் பொருள் என்ன? கோயில் பெரிது. கோபுரம் பெரிது. சிவலிங்கம் பெரிது. நந்தி பெரிது. அக்கோயிலைக் கட்டிய மன்னனின் உள்ளமும் பெரிது என்று தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் பெருமையோடு பேசுகிறோம். ஆனால் அங்கும் அரைகுறையாகத்தான் தமிழொலி கேட்கிறது.
|
ஆற்று மணலும் மாற்று வழியும் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00 |
காவிரி, பாலாறு, பெண்ணையாறு உள்ளிட்ட தமிழ்நாட்டு ஆற்றுப்படுகைகளில் உள்ள 38 மணல் குவாரிகளை மூடுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் செயல்பட்ட மணல் குவாரிகள் சிறிது காலத்திற்கு முன்பாக மூடப்பட்டுவிட்டன. ஆகமொத்தம் தமிழகத்தில் இயங்கி வந்த 225 மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன.
|
|
|
|
|
பக்கம் 86 - மொத்தம் 119 இல் |