தென்செய்தி
கடிதோச்சி மெல்ல எறிக! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016 12:10

"குற்றவாளியைக் கட்டித் தழுவி அவரை விருந்திற்கு நீதிபதி அழைக்க வேண்டும் என யாரும் எதிர்பார்க்க இயலாது. ஆனால், விசாரணையின் போதும் தண்டனை வழங்கும்போதும் மனிதநேயம் நீதிபதிகளின் உள்ளங்களில் குடிகொண்டிருக்கு மானால், நிலைமைகள் சீர்திருந்தும். ஆளைக்குறித்துக் கவலைப்படாமலும், அப்பால் நின்றும் நீதிபதிகள் தாங்கள் வழங்கும் தண்டனையின் விளைவுகளைக் குறித்து சிறிதளவே அறிந்திருப்பார்கள். ஆனால், அவர்களின் விழிப்புணர்வு மேலும் பெருகி, குற்றவாளியை மனிதநேயத்துடன் அணுகுவார்களானால் அது சமூகத்திற்கு நன்மை பயக்கும். இருவரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வு ஏற்படும்போதுதான் இது நடைபெறும்'' என இந்தியாவின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு ஒருமுறை கூறினார்.

 
தமிழக விவசாயத்தை பாழாக்கும் கெயில் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016 12:07

தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயுக் குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரி தமிழக அரசு அளித்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக உழவர்களின் எதிர்காலத்தை முற்றிலுமாகச் சீரழிக்கும் இத்திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதற்கு எதிராக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாயச் சங்கங்கள் ஆகியவை போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு நிரந்தர வைப்பு நிதி அளித்தவர்கள் பட்டியல் நன்றியுடன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016 12:03

வ.எண். பெயர் தொகை

0027 ந. வசந்தன், இலண்டன். 10,000
0660 பரதன், 5,000
0661 ப. திருஞானசம்பந்தன்,சுவிட்சர்லாந்து. 5,000
0662 ஆறுமுகம் குடும்பம்,கனடா. 5,000
0663 இரவீந்திரன்,செர்மனி. 5,000
0664 ரவிச்சந்திரன், இலண்டன். 5,000
895 வேலுச்சாமி,திருப்பூர். 1,000

 
ஹென்றி டிபேனுக்கு விருது அம்னெஸ்டி இன்டர்நேசனல் அமைப்பு வழங்கியது PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016 12:06

உலக அளவில் இயங்கி வரும் அம்னெஸ்டி இன்டர்நேசனல் (ஜெர்மனி) என்னும் மனித உரிமை அமைப்பு மனித உரிமைப் போராளி திரு. ஹென்றி டிபேன் அவர்களின் தொண்டினைப் பாராட்டி விருதளித்துள்ளது.

 
புண்ணுக்குப் புணுகு பூசும் வேலை! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2016 15:11

இந்தியாவில் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்கள் கல்லூரிகளையும் தங்கள் பல்கலைக் கழக கிளைகளையும் தொடங்குவதற்கான அனுமதியை வழங்கும் முன்னேற்பாடுகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது இதே முயற்சியில் ஈடுபட்டபோது இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பா.ஜ.க. கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் இப்போது பா.ஜ.க. அரசு அதே முயற்சியில் இன்னும் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

உலக வணிக அமைப்பின் முடிவை இந்திய அரசு ஏற்றுக்கொண்டதின் விளைவே இதுவாகும். இந்திய நாடு முழுவதிலும் இயங்கிவரும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிறவகை தொழில் நுட்ப அல்லது தொழில்முறை கல்விக் கழகங்களை வணிக நிறுவனங்களாகவும் மாணவர்களை நுகர்வோர் களாகவும் மாற்றிவிடும் அபாயகரமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

 
«தொடக்கம்முன்111112113114115116அடுத்ததுமுடிவு»

பக்கம் 113 - மொத்தம் 116 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.