| 
					
		 | 
	
		
		
												
						
		| 
					தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு - சூலை 15-இல் தஞ்சையில் நடைபெறும்			 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
		    
 
	| 
		புதன்கிழமை, 23 மார்ச் 2016 13:45	 | 
 
| 
 தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு வரவேற்புக் குழு நிர்வாகிகள் மற்றும் மலர்க்குழு, விருதாளர் பட்டியல், தயாரிப்புக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 05-03-2016 சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது. 
 | 
 
 
 
		| 
					நீதி தேவதை நடுங்குகிறாள்!  - பழ. நெடுமாறன்			 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
		    
 
	| 
		செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2016 14:31	 | 
 
| 
 உலக நாடுகளில் மிகச் சிறந்த நூறு பல்கலைக் கழகங்களில் ஒன்றாக புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் திகழ்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70 பல்கலைக் கழகங்களுடன் உறவு பூண்டு மாணவர்கள் பரிமாற்றம், ஆய்வுகள் பரிமாற்றம் போன்றவற்றில் நிகரற்று விளங்குகிறது. 
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் குறிப்பாக மிகப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி கற்கிறார்கள். பருவம் ஒன்றிற்கு 220 ரூபாய் கட்டணம் மட்டுமே மாணவர்களிடம் வாங்கப்படுகிறது. சிறார் பள்ளிகளில்கூட பல்லாயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும் இக்காலக்கட்டத்தில் உயர் கல்வி குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் கிடைப்பது மாபெரும் சாதனையாகும். 
 | 
 
 
 
 | 
														
						
		| 
					அதிகாரியின் ஆணவத்தால் உயிரிழந்த ஈழத் தமிழர் - பழ. நெடுமாறன், ஹென்றி திபேன் போராட்டம்!			 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
		    
 
	| 
		புதன்கிழமை, 23 மார்ச் 2016 13:40	 | 
 
| 
  
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டியில் உள்ள ஈழத் தமிழர் அகதிகள் முகாமில் 540 பேர் வாழ்கின்றனர். இம்முகாமில் கடந்த 25 ஆண்டு காலமாக தனது குடும்பத்துடன் இரவிந்திரன் வாழ்ந்து வந்தார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும் ஆறு குழந்தைகளும் உள்ளனர். இவர்களில் பிரவீன் என்ற 13 வயது மகனின் உடல் நலம் பாதிக்கப்பட்டு மதுரை திருமங்கலம் மருத்துவமனையில் இரவிந்திரன் சேர்த்துள்ளார். 
 | 
 
 
 
		| 
					நேதாஜிக்கு அள்ளித் தந்த தமிழர்-லியோன் புருசாந்தி			 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
	
		
	 	 | 
		    
 
	| 
		செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2016 14:21	 | 
 
| 
 ஆங்கிலத்தில் : ஜே.பி.பி. மேன் (பாரிஸ்)  - தமிழாக்கம் : தமிழோசை க.விசயகுமார் பிறப்பு : 1901 மே 1 இறப்பு - 1969  - பிறந்த ஊர் : பாண்டிச்சேரி 
வரலாற்றுப் பின்னணியும் உள்ளடக்கமும் 
தமிழர்களுக்கு தென்கிழக்காசியா, சீனம் ஆகியவற்றுடன் மிக நீண்ட காலமாகவே வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பாக பத்தொன் பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல ஆயிரம் தமிழர்கள் பர்மாவுக்கும் மலேசியாவுக்கும் தொழிலாளர்களாகச் சென்றனர். 
 | 
 
 
 
 | 
				 
		 
		 
	 | 
	| 
		
	 | 
	
				
  
	 | 
	| 
		பக்கம் 114 - மொத்தம் 119 இல்	 |