தென்செய்தி
பெரு முதலாளிகள் வங்கி தொடங்க அனுமதிப்பது வரலாற்றுப் போக்கைத் திருப்புவதாகும் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 11:11

இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகளுக்குச் சொந்தமான நிறுவனங்கள் வங்கிகளை தொடங்க அனுமதிக்கலாம் என ரிசர்வ் வங்கி அமைத்த குழு பரிந்துரைத்துள்ளது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. ஏற்கெனவே டாடா, பிர்லா மற்றும் பெரு முதலாளிகள் நடத்திவந்த வங்கிகளை 1969ஆம் ஆண்டில் இந்திய அரசு தேசியமயமாக்கியது.

 
தில்லியைச் சுற்றி வளைத்து உழவர்களின் முற்றுகைப் போராட்டம் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 11:05

இந்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான உழவர்கள் தில்லியை முற்றுகையிடும் போராட்டத்தை நவம்பர் 30-11-20இருந்து ஒருவாரக் காலத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அரியானா எல்லையைத்தாண்டி அவர்கள் செல்லாமல் தடுப்பதற்கு அரியானா அரசும், மத்திய அரசும் பெரும் முயற்சி செய்து படைகளைக் குவித்தன.

 
திருமண விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 10:44

மணமக்கள்:

லீலா சிறீநிதி - கபாலீசுவரன்

Shreenithi

மதுரை நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் மா. பழநியப்பன் – காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மீனா பிரியதர்சினி இணையரின் அருமை மகள் லீலா சிறீநிதி, நெல்லை மு. சொர்ணகுமார் – விநாயக சண்முக சுந்தரி இணையரின் அருமை மகன் சொ. கபாலீசுவரன் ஆகியோரின் திருமண விழா 26-11-20 அன்று மதுரையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற வரவேற்பிலும், 28-11-20 அன்று நடைபெற்ற மருத்துவர்களுக்கான வரவேற்பிலும் திரளான உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

 
பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 10:46

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… இந்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உழவர்கள் டிசம்பர் 8ஆம் தேதி நடத்த இருக்கிற பந்த் போராட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி முழுமையான ஆதரவு தெரிவிக்கிறது என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.

 
ஒடுக்கப்பட்ட, பழங்குடி மாணவர்களின் படிப்பு பாழாகும்! இந்திய அரசுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020 15:32

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 18,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வந்ததை இந்திய அரசு நிறுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 37 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.