தென்செய்தி
தஞ்சையில் மாவீரர் நாள் - நிகழ்ச்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2017 12:40

தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சி 27-11-2017 அன்று மாலை 5 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது. உலகத்  தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கலந்துகொண்டு பங்கேற்ற இந்நிகழ்ச்சி மாவீரர் சுடரை திருமதி. மோகனதாசு சாரதா தேவி ஏற்றி வைத்தார்.

இவரின் இரு புதல்வர்களான கரும்புலி சீராளன், சிறீதரன் ஆகியோர் மாவீரர்களானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவரைத் தொடர்ந்து அனைவரும் சுடரை  ஏற்றி மறைந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

 
இந்தி, ராஜஸ்தானியில் நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்படும்போது தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏன்? - கே. சந்துரு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2017 12:21

கேரள உயர் நீதிமன்றத்தின் வைரவிழாக் கொண்டாட்டங்களைத் தொடக்கிவைத்துப் பேசுகையில், "உயர் நீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் பெயர்க்கப்பட  வேண்டும்; தீர்ப்புகளின் நகல்கள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்'' என்று குறிப்பிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். "பல்வேறு மொழிகளைக்  கொண்டது நம் நாடு. தீர்ப்பின் முக்கியமான, நுட்பமான விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்தால் மனுதாரருக்குப் புரியாமல் போய்விடும் வாய்ப்புள்ளது'' என்றும் சுட்டிக்காட்டினார். இந்திய மக்களில் பெரும்பான்மையினரது கருத்தின் வெளிப்பாடாக நாம் இதைக் கருதலாம். ஆனால், அப்படிப்பட்ட நடைமுறைக்கு உண்டான  திறவுகோல் அவர் கையிலேயே இருக்கிறது!

 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்- தஞ்சை தமிழீழ விடுதலைப் போரில் உயிர் ஈகம் செய்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான மாவீரர் நாள் நிகழ்ச்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017 12:52

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்- தஞ்சை
தமிழீழ விடுதலைப் போரில் உயிர் ஈகம் செய்த மக்களுக்கும் மாவீரர்களுக்குமான
மாவீரர் நாள் நிகழ்ச்சி

வரலாற்றுச் சிறப்புமிக்க
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்
5ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விழா

 
நாகை மாவட்ட தமிழர் தேசிய முன்னணி நடத்தும் "தமிழர் உரிமை மீட்பு - தமிழக இயற்கை வளம் காப்பு மாநாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017 12:55

தமிழால் ஒன்றுபடுவோம்! தமிழராய் ஒன்றிணைவோம்!!

நாகை மாவட்ட தமிழர் தேசிய முன்னணி நடத்தும்
"தமிழர் உரிமை மீட்பு - தமிழக இயற்கை வளம் காப்பு
மாநாடு

 
புதிய மொந்தையில் பழைய சிங்களக் கள்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017 12:48

இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் புதிய அரசியல் யாப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும் என ஐ.நா. மனித உரிமை ஆணையமும் மற்றும் பல்வேறு நாடுகளும் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாளில் அரசியல் யாப்பு அவையை அமைக்கும் தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி அரசியல் யாப்பு அவை கூடி அரசியல் யாப்பு வழிகாட்டும் குழு ஒன்றை தலைமையமைச்சர் ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அமைத்தது.

 
«தொடக்கம்முன்71727374757677787980அடுத்ததுமுடிவு»

பக்கம் 75 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.