தென்செய்தி
கவிஞர் இன்குலாபின் "ஒளவை' நாடகம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:54

கவிஞர் இன்குலாபின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பேராசிரியர் அ. மங்கையின் இயக்கத்தில் இன்குலாபின் "ஒளவை' நாடகம் மேடையேற்றப்பட்டது.

"புத்தி சொல்லும் எந்தப் பெண்ணும் எந்த வயதிலும் பாட்டிதான்'' என்ற ஒற்றை வாக்கியத்துடன், தமிழ்ச் சமூகத்தின் பொது மனத்தில் பதியவைத்து, ஒளவை பற்றி கற்பிக்கப்பட்டிருக்கும் ஒற்றைப்படிமத்தை கலைத்து, சங்க ஒளவையை இனக்குழுப் பண்பாட்டின் பெரும் துடிப்பும் விடுதலையும் கொண்ட பேராற்றலாய்ப் புதுப்பித்துக் காட்டும் அற்புதப் படைப்பு இந்நாடகம்.

 
மறைக்கப்படும் உண்மைகள் - ஆர். நல்லகண்ணு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:48

மூன்றாண்டுகளாக மழையில்லாமல் கடும் வறட்சியில் தமிழ்நாடு பாதிக்கப்பட்டது. 146 ஆண்டுகளில் ஏற்படாத வறட்சி என்று தமிழக முதல்வர் அறிக்கை விட்டுப் போதுமான நிவாரணப் பணிகள் எதுவும் செய்யப்படவில்லை. நாடு விடுதலையடைந்து, எழுபதாண்டுகளில் வறட்சி காலத்தில் தமிழக மக்கள் குடிதண்ணீருக்குக்கூட வழியில்லாமல் திண்டாடியது இல்லை. உடைக்கப்பட்ட பாறைக்குழிகளில் தேங்கிக்கிடந்த தண்ணீரை சென்னை மாநகர மக்களுக்கு வழங்கப்பட்ட கொடுமையும் நடைபெற்றது.

 
வெண்மணி கொடுந்துயரம் - 50 PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:26

1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் தமிழக வரலாற்றில் என்றும் அழிக்க முடியாத இரத்தக் கறை படிந்த நாளாகும்.

காவிரி பாய்ந்தோடி வளங்கொழிக்கச் செய்யும் தஞ்சை சமவெளி வெண்மணியில் 19 குழந்தைகள் உள்பட 44 பேர் பதறப் பதற தீயில் கருகி மாண்டு மடிந்தனர்.
ஒரு மூட்டை நெல்லுக்கு ஒரு படி நெல் மட்டுமே உழவுத்தொழிலாளர்களுக்கு கூலியாக வழங்கப்பட்டது. மேலும் அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடியதைப் பொறுக்க முடியாத நில உரிமையாளர்கள் இந்தக் கொடுஞ்செயலைச் செய்தார்கள். ஒரே குடிசைக்குள் தஞ்சம் புகுந்த 44 பேரையும் உயிரோடு கொளுத்தினார்கள். சாதி ஆணவமும் இதற்குக் காரணமாகும்.

 
சேலம் எஃகு ஆலையைத் தனியார் மயமாக்காதே! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:45

உயர்தரமான எஃகு தயாரிப்பில் உலக அளவில் புகழ் வாய்ந்தது சேலம் உருக்காலையாகும். தமிழ்நாட்டின் பெருமை மிகுந்த அடையாளமாக அது திகழ்ந்து வருகிறது.

சேலம் எஃகு ஆலைக்கு தேவையான மூலப் பொருட்கள் அனைத்தும் அதன் அருகிலேயே கிடைக்கின்றன என்பது சிறப்பானதாகும். தரமான இரும்புத் தாது இம்மாவட்டத்திலேயே கிடைக்கிறது. இந்த இரும்புத் தாது குறைவான அளவுக்கு சல்பர் மற்றும் பாஸ்பரஸ் கொணடிருப்பதால் சிறந்த உயர் தரமான எஃகு இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. எஃகு உற்பத்தித் தொழிலுக்குத் தேவையான சுண்ணாம்புக் கல்லும், டோலமைட்டும் சேலம் மாவட்டத்திலேயே கிடைக்கின்றன.

 
கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு சாகித்திய அகாடமி விருது ஏற்க குடும்பத்தினர் மறுப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 01 ஜனவரி 2018 11:10

இந்தியாவில் 24 மொழிகளில் வெளி யாகும் சிறந்த இலக்கியப் படைப்பு களைத் தேர்வு செய்து "சாகித்ய அகாடமி' சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படு கின்றன. அதன்படி, தமிழ் மொழிக்கான விருதுக்கு கவிஞர் இன்குலாப் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

 
«தொடக்கம்முன்71727374757677787980அடுத்ததுமுடிவு»

பக்கம் 72 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.