உத்தராகண்ட மாநிலத்தில் வெளியார் நிலம் வாங்கத் தடை! பா.ச.க. முதல்வர் அறிவிப்பு |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:40 |
இமயமலைச் சாரலில் அமைந்துள்ள உத்தராகண்ட் மாநிலத்தில் வெளியார் நிலம் வாங்குவதற்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் நிறைந்த இம்மாநிலத்தில் பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலதிபர்களும், உல்லாச விடுதி உரிமையாளர்களும், விவசாய நிலங்களை வாங்கிக் குவிக்கும் போக்கு நாளுக்கு நாள் பெருகி வந்தது. இதன் விளைவாக அம்மாநில மக்கள் தங்கள் மண்ணை முற்றிலுமாகப் பறிகொடுக்கும் நிலைமை உருவாயிற்று.
அம்மாநிலத்தில் பா.ச.க. கட்சி ஆட்சியில் அமர்ந்துள்ளது. மாநில முதல்வரான புஷ்கர் சிங் தாமி என்பவர் இப்பிரச்னைக் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு அம்மாநிலத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் சுபாஷ் குமார் என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார். அந்த குழு 23 அம்சங்களைக் கொண்ட பரிந்துரைகளை அளித்துள்ளது.
|
|
தமிழீழத்தில் சீனர் நுழைவு - இந்தியாவிற்கு அபாய அறிவிப்பு |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:36 |
இந்தியாவிற்குள் ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீது இந்திய தேசியப் புலனாய்வுப் பிரிவு கடந்த சில நாட்களில் முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
|
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:30 |
இந்திய தொழில் வளர்ச்சி வங்கியின் மேனாள் துணைப் பொது மேலாளரான பொறியாளர் சு. பழனிராசன் – திருமதி. பங்கயற்செல்வி ஆகியோரின் திருமணப் பொன் விழாவும், திரு. பழனிராசனின் 75ஆம் அகவை பவழ விழாவும் 10.09.22 அன்று தஞ்சை ஐசுவர்யம் திருமண மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
|
|
பாரதி கண்ட “புதுமைப் பெண்” உயிர்த்தெழுகிறாள் - பழ. நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:33 |
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவிகள் உயர்கல்வி கற்க மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்திருப்பதை தமிழக மக்கள் வரவேற்றுப் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.
|
வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2022 11:20 |
புலவர் இரத்தினவேலு – தமிழ்ச்செல்வி இணையரின் மகளான செல்வி: தெய்வ கோமதி – செல்வன்: செல்வ விக்னேஷ் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா சென்னை இராமாபுரம் ஜீவன் ஜோதி மகாலில் சிறப்பாக நடைபெற்றது.
|
|
|
|
|
பக்கம் 16 - மொத்தம் 119 இல் |