கருணாநிதியின் இயற்கையான குரூர குணம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2010 15:59 |
'தானும் செய்யார் பிறரையும் செய்ய விடார்' என்பது ஆன்றோர் வாக்கு. இதற்கு முழுமையான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் முதலமைச்சர் கருணாநிதி ஆவார். ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் அவர்களுக்கு உதவியாக எதுவும் செய்வதற்கு இவர் துணிவதில்லை. வேறு யாரானும் செய்ய முன்வந்தாலும் அதை எப்படியாவது தடுப்பதற்கு முழுமுயற்சி செய்வார்.
|
|
படமெடுத்தாடும் பாசிசப் பாம்பு |
|
|
|
புதன்கிழமை, 28 ஏப்ரல் 2010 15:58 |
மிகச்சிறந்த நீதிபதிகளும் சட்ட நுணுக்கங்களில் துறைபோகிய வழக்கறிஞர்களும் சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் பெரும்புகழை ஈட்டிக்கொடுத்திருக் கிறார்கள். இந்தியாவில் உள்ள பிற உயர்நீதிமன்றங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த பெருமைக்குரிய சென்னை உயர்நீதிமன்றம் இன்று சிறுமைப்பட்டுக் கிடக்கிறது. உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் காவல்படையினாலும், கட்சிக் குண்டர்களாலும் மிருகத்தனமாகத் தாக்கப்படுகிறார்கள்.
|
சனநாயகம் சிதைந்து சர்வாதிகாரம் தலைதூக்கும் அபாயம் |
|
|
|
புதன்கிழமை, 31 மார்ச் 2010 15:55 |
இந்திய நாடாளுமன்றத்தில் சில ஆண்டு காலமாகவே கூச்சல், குழப்பம், அவையின் மய்யப்பகுதியில் குழுமி சபாநாயகரை எதிர்த்து முழக்கமிடுதல் போன்றவை அதிகமாகிவிட்டன. நாடாளுமன்ற மேலவையிலும் இதன் எதிரொலி அடிக்கடி கேட்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவையின் நடவடிக்கைகளை அமைதியான முறையில் நடத்த இயலாத நிலையில் சபாநாயகர்கள் அவையை முதலில் சில மணி நேரங்களும் பிறகு நாள் முழுவதும் ஒத்திவைக்க நேரிட்டுவிடுகிறது.
|
|
சசிதரூர்-சீரழிவு அரசியலின் சின்னம் |
|
|
|
வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2010 15:56 |
மத்திய இணை அமைச்சர் சசிதரூர் குறித்து நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பத்திரிகைகளிலும் மிகக்கடுமையான விமர்சனங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக அவர் பதவி விலக நேர்ந்திருக்கிறது. பதவி விலகியதால் மட்டுமே பிரச்சினை தீர்ந்துவிடாது. மிக ஆழமாகப் புரையோடிவிட்ட ஒரு புண்ணை புணுகு பூசி மறைத்துவிட முடியாது.
|
அரச பயங்கரவாதத்தை முதலில் நிறுத்துக! |
|
|
|
சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010 15:50 |
"மாவோயிஸ்டுகளின் வன்முறை நடவடிக்கைகளை சில அமைப்புகள் நியாயப்படுத்தப் பார்க்கின்றன. ஆனால் மாவோயிஸ்டு நக்சல்களுக்கு அறிவார்ந்த வகையிலும் மற்றும் பொருளாதார ரீதியிலும் ஆதரவு தெரிவித்து வரும் மெத்தப் படித்தவர்களும் இந்த வன்முறையை மிகக்கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்'' என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் 16-02-10 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
|
|
|
|
|
பக்கம் 12 - மொத்தம் 13 இல் |