தென்செய்தி
உழவுத் தொழிலில் தனியார் பெரு நிறுவனங்கள் - பால் தொழில் வரலாற்றிலிருந்து பாடம் கற்போம் - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 11:02

பால் உற்பத்தியும் பசு வளர்ப்பும் சங்க காலம் தொட்டு தமிழர்களின் பாரம்பரியத் தொழிலாக இருந்து வருகிறது.
தீம்பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்
தாம்பின் பிணித்து
என்ற முல்லைக் கலிப் பாடலைப் போன்ற சங்க கால முல்லை நிலப் பாடல்கள் தொடங்கி தமிழர்கள் பசு வளர்ப்பிலும் பால் உற்பத்தியிலும் ஈடுபட்ட செய்திகள் தமிழ் இலக்கியமெங்கும் விரவி கிடக்கின்றன. உழவுச் சமூகமான தமிழர் சமூகத்தில் பசு வளர்ப்பு என்பது வாழ்வியலின் முக்கியமான ஓர் அங்கமாகவே இருந்து வந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2020 14:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
ஆளுநரா? நடுவண் அரசின் ஏவலரா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 11:03

தமிழ் நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 7.5% இடங்கள் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடாக அளிக்க வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி அனைத்துக் கட்சியினரும் இணைந்து ஒரு மனதாக நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் காலம் கடத்தி வருகிறார். ஏறத்தாழ ஒரு மாதம் கடந்த பிறகு அக்டோபர் 23-ஆம் தேதி அன்று ஆளுநர் பின் வருமாறு அறிவித்திருக்கிறார்.

 

செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2020 14:36 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
கல்விக் கண்களைக் குருடாக்கும் கல்விக் கொள்கை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 05 அக்டோபர் 2020 14:30

1950ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தில் கல்வி மாநிலப் பட்டியலில்தான் சேர்க்கப்பட்டிருந்தது. அந்தந்த மாநிலங்களின் மக்கள் மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு போன்றவற்றின் அடிப்படையில் அந்தந்த மாநில மாணவர்களுக்குரிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் தான் முடிவு செய்ய முடியும்.

 
வேளாண்மை - தொழில் - புதிய சட்டங்கள் உழவர்கள் உரிமைகளை இழப்பார்கள் தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுவார்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020 15:18

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்"
இந்த குறள் எழுதப்பட்ட காலத்தில் மக்கள் உழவர்களை எந்தளவுக்கு மதித்துப் போற்றினார்கள் என்பதை வள்ளுவர் எடுத்துக்காட்டியுள்ளார். ஆனால், அதற்கு நேர் எதிர்மாறான சூழ்நிலை காலப்போக்கில் உருவாகி விட்டது.

 
கடப்பாரையை விழுங்கி கசாயம் குடித்தல் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 05 அக்டோபர் 2020 14:18

1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் நாள் இந்திய வரலாற்றில் என்றும் மறையாத களங்கம் படைத்த  நாளாகும். கி.பி. 1528ஆம் ஆண்டில் கட்டப்பட்டு 464ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து நின்ற பாபர் மசூதியை இந்துத்துவா வெறியர்கள் இடித்துத் தகர்த்த நாள் அதுவாகும்.

 
«தொடக்கம்முன்51525354555657585960அடுத்ததுமுடிவு»

பக்கம் 52 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.