தென்செய்தி
படித்தேன் படியுங்கள்... ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:11

தமிழீழத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்தபோது துணிந்து அங்குச் சென்று இரண்டாண்டுகள் தங்கியிருந்து விடுதலைப் புலிகளுக்கும் பிறருக்கும் தமிழைக் கற்பித்தவர்தாம் பேராசிரியர் அறிவரசன்.

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி, இவரிடம் தமிழ் கற்ற மாணவியாவார்.

 
சென்னை, தஞ்சை, மதுரையில் செப்டம்பர் 24 ஆம் நாள் தமிழர் தேசிய முன்னணியின் ஆர்ப்பாட்டம்-தமிழர்களே பங்கேற்பீர்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2016 12:56

தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்கள் முகாம்கள் என்ற பெயரில் எவ்வித உரிமைகளும் இல்லாமலும் போதுமான உணவு மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமலும், குழந்தைகளுக்கு போதுமான கல்வி வசதி இல்லாமலும், வெளியே சென்று வேலை பார்க்க அனுமதிக்கப்படாமலும் சொல்லொணாத துன்பங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதற்குக் காரணம் ஐ.நா. ஏதிலியர் பட்டயத்தில் இந்திய அரசு கையெழுத்திட மறுத்து வருவதால் இவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் என இந்திய அரசு கூறுகிறது.

 
ஈழத்தமிழ் ஏதிலியர் உரிமையுடன் வாழ ஐ.நா. ஏதிலியர் பட்டயத்தில் இந்திய அரசே கையெழுத்திடு - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2016 12:38

அய். நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் நடக்கும் ்குறிப்பிட்ட கால இடைவெளியிலான உலகளாவிய மறு ஆய்வு் இந்த ஆண்டு நடக்க உள்ளது. இது உலக அளவில் மனித உரிமைகள் சார்ந்து நடக்கும் முகாமையானதும் ஆக்கரீதியானதுமான செயற்பாடு ஆகும்.

ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒரு முறை உலக நாடுகள் தத்தமது நாட்டின் மனித உரிமைச் சூழலை ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும். இதனையே ்குறிப்பிட்ட கால இடைவெளியிலான உலகளாவிய மறு ஆய்வு” – Universal Periodic Review (UPR) என்று அழைப்பார்கள். இந்த ஆய்வுக்கு ஒவ்வொரு நாடும் மிகுந்த முகாமையைக் கொடுக்கும்.

 
காவிரி-தமிழகத்திற்குக் கேடு விளைவிக்கும் இந்தியத் தலைவர்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2016 12:54

காவிரிப் பிரச்சினையில் தமிழக உழவர்களும் கட்சிகளும் இணைந்து நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் அளித்தத் தீர்ப்புகளை நிறைவேற்றுமாறு இந்திய அரசை வற்புறுத்திப் போராட்டம் நடத்தினர். தமிழக அரசும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

உச்சநீதிமன்றம் தலையிட்டு "வாழு, வாழ விடு'' என்ற அடிப்படையிலும் நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்குமாறும் முதல் கட்டமாக 13 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.

 
தமிழக மக்களின் மூன்று கேள்விகள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2016 12:30

இந்திய அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான வெங்கையா (நாயுடு) "காவிரிப் பிரச்சினையில் சட்ட முறையிலான தீர்வு காண வேண்டும்'' என கூறியுள்ளார்.

காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசும், இந்திய அரசும் தொடர்ந்து சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல் சட்டத்தை எவ்வாறெல்லாம் துச்சமாக மதித்துத் தூக்கியெறிந்து தமிழகத்தை வஞ்சித்தன, தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன என்பதை கீழ்க்கண்ட உண்மைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

 
«தொடக்கம்முன்919293949596979899100அடுத்ததுமுடிவு»

பக்கம் 95 - மொத்தம் 112 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.