அண்மைக் காணொளிகள் |
|
தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும். |
உங்கள் கருத்துஇணைப்பில்...எங்களிடம் 23 விருந்தினர்கள் இணைப்பு நிலையில் |
||||||||||||||



ழர்கள் மீதான தனது வன்மம் மிகுந்த போரை பல வழிகளிலும் இலங்கை அரசு இன்று வரை தொடர்ந்து வருகிறது. இலங்கை மண்ணில் தமிழர்கள் தமிழர்களாக வாழ்வதற்கான அத்தனை வழிகளையும் அது அடைத்து வருகிறது. வரலாற்று ரீதியான திரிபுகளை அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் ஊடாக அது பதிவு செய்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பறித்து அவர்களின் சமூகப் பொருளியல் வாழ்வையே அது அழிக்கிறது. இதனால் சமூகத்தில் குற்றங்கள் பெருகி தமிழ் மக்கள் ஒரு சமூகமாக இணைந்து வாழ இயலாமல், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்றவர்களாகவும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், அன்றாட வாழ்வைக் கடந்து எதையும் சிந்திக்க இயலாதவர்களாகவும் தமிழர்களை முடக்க அது திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.