தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
மாற்று அரசியல் ஏமாற்று அரசியலாகி விடக்கூடாது தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:48

தமிழ் நாட்டில் கடந்த 45 ஆண்டு காலத்திற்கு மேல் நடைபெற்ற திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இலஞ்சம், ஊழல், இயற்கை வளங்கள் கொள்ளை, சனநாயக உரிமைகள் பறிப்பு போன்றவை தலைவிரித்தாடியதன் விளைவாக இரு கட்சிகளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ளன.
தமிழகத்தில் பணநாயகமும், பதவி நாயகமும், சந்தர்ப்பவாதமும், அதிகார போதையும் கைகோர்த்து சனநாயகத்தை வீழ்த்த முயலுகின்றன.
துன்பம், தொண்டு, தியாகம் ஆகியவற்றை பொது வாழ்வின் குறிக்கோள்களாக கொண்ட நிலை மாறி பதவிவெறி, அதிகார மமதை, ஊழலில் திளைத்தல் என்பவை குறிக்கோள்களாக மாறிவிட்டன.

 
பொறுப்பான ஆளுங்கட்சியும் விழிப்பான எதிர்க்கட்சியும் தேவை - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:44

சென்னை மாகாண சட்டமன்றம் இந்தியாவில் உள்ள பிற மாகாணங்களின் சட்ட மன்றங்களுக்கு முன்மாதிரியாகவும் எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தது. இச்சட்டமன்றத்தில் முதலமைச்சராக இருந்த இராஜாஜி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் - ஜெனரல் பதவி வகித்தார். இச்சட்டமன்றத்தில் அமைச்சர்களாக இருந்த வி.வி. கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள் பிற்காலத்தில் குடியரசுத் தலைவர்களானார்கள். பின்னர் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமன் குடியரசுத் தலைவர் ஆனார்.

 
ஓவியக் கலையில் சாதனைப்படைத்த சந்தானம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:39

தமிழர்களின் எடுத்துக்காட்டாக ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொன்மையான யாழ் மற்றும் பஞ்சமுக வாத்தியம் போன்ற இசைக் கருவிகள், செட்டிநாட்டு சிற்ப வேலைப்பாடுகள், அழிந்து கொண்டிருக்கிற தோல்பாவை கூத்துக்களின் வடிவங்கள் ஆகியவற்றுடன் தமிழர்களின் அழிந்துவிட்ட, அழிககப்பட்டு வரும் மரபு சார்ந்த வண்ணங்களையும் அனைவரும் விரும்பும் வகையில் நவீன உத்திகளோடு ஓவியங்களிலும் வெளிப்படுத்தி வருபவர் ஓவியர் வீர. சந்தானம். நடிகர் என்ற மற்றொரு முகமும் இவருக்கு உண்டு. கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு திடீரென சுயநினைவற்று, ஒரு மாத காலம் கோமாவில் கிடந்தவர் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார். இவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தென்னக பண்பாட்டு மையமான "தக்ஷின் சித்ரா' இவரைப்பற்றி "காமதேனு' என்ற குறும்படத்தை தயாரித்ததுடன், இவரது படைப்புகளைக் கண்காட்சியாகவும் வைத்திருக்கிறார்கள். ஒரு மாதம் நடக்கவிருக்கும் இந்த கண்காட்சி குறித்தும் - அவர் கடந்து வந்த வாழ்க்கை குறித்தும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

 
9 ஆண்டு காலமாக சிறப்பு முகாமில் வாடும் தமிழர்கள் விடுதலை செய்யுமாறு பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:41

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
செய்யாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 14 ஈழத் தமிழர்கள் திடீரென நேற்று திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்தி அவர்கள் சாகும்வரை உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறார்கள்.

 
மதிப்புரை: ஈழம் அமையும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2016 14:34

தொன்மையும், பெருமையும் மிக்க தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் 2009ஆம் ஆண்டில் இலங்கை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த படுகொலையைப் போன்ற அவல நிகழ்ச்சி நடைபெற்றதில்லை. என்றென்றும் தமிழர்களால் நினைத்து நினைத்து நெஞ்சம் குமுறச் செய்யும் இந்நிகழ்ச்சியை நெக்குருக வைக்கும் ஆவண ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறார் நண்பர் கா. அய்யநாதன் அவர்கள்.

சிறந்த ஊடகவியலாளராக தமிழர்களால் அறியப்பட்ட அய்யநாதன் அவர்கள் சிறந்த வரலாற்றாய்வாளராகவும் திகழ்கிறார் என்பதை இந்நூல் நிறுவுகிறது. தமிழர் வரலாற்றின் ஒரு முக்கியமான காலப்பகுதியைப் பதிவு செய்துள்ள இந்நூல் எதிர்காலத்தில் வரலாற்றுப் பெட்டகமாக நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.

 
«தொடக்கம்முன்111112113114115116117118119120அடுத்ததுமுடிவு»

பக்கம் 114 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 18 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்