தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
வள்ளலார் விதைத்தத் தமிழ்த் தேசியம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:13

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நாடெங்கும் பரவியிருந்த காலத்தில் வள்ளலார் வாழ்ந்தார். வணிகம் நடத்திப் பிழைக்க வந்த ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றி ஆளும் அளவுக்கு செல்வாக்கு பெற்றார்கள். அவர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடத் துணிந்த சிற்றரசர்கள் மிகக்கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். தமிழ்நாட்டில் மருது சகோதரர்கள், கட்டபொம்மன், ஊமைத்துரை போன்ற பலர் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள். இதைக்கண்டு அஞ்சிய ஏனைய சிற்றரசர்கள் ஆங்கிலேயருக்கு அடிபணிந்தார்கள்.

 
சிங்களச் சிறையில் 7 ஆண்டு காலமாக வாடும் - தமிழக மீனவர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:10

நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மணிவண்ணன், செண்பகம், நாகராஜ், அருண்குமார், சதீஷ் ஆகிய நான்கு பேரும் கடந்த 2007ஆம் ஆண்டு வழக்கம்போல மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். அதைப்போல செருது கிராமத்தைச் சேர்ந்த, சிவசுப்பிரமணியன், தென்பாதியைச் சேர்ந்த பாலகிருட்டிணன், பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், சென்னையைச் சேர்ந்த குப்புசாமி, சீர்காழியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி, கடலூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகிய ஐந்து பேரும் 2008ஆம் ஆண்டு மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றார்கள். ஆனால் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

 
சனநாயகப் பண்புகள் நிலவுகிறதா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:04

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திருத்தம் பெரும்பான்மை ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இராசஸ்தான், அரியானா ஆகிய மாநிலங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறைந்தபட்சம் மெட்ரிகுலேசன் வரை படித்திருக்க வேண்டும் என்ற தகுதி வரையறைக்கப்பட்டுள்ளது. இதைக் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடாததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த திருத்தம் தான் அது.

 
தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 02 ஏப்ரல் 2016 14:07

தமிழ் அமைப்புகளின் நிகழ்ச்சிகள், நூல் வெளியீட்டு விழாக்கள், திருமண விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்குத் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களை அழைக்க விரும்புவர்கள் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளர்ச்சி நிதிக்கு ரூ.10,000/-த்திற்குக் குறையாமல் நிதி அளித்து உதவும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

 
தழைத்தோங்கும் தமிழ்த் தேசியம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 மார்ச் 2016 15:05

மரபினம், நாடு, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய இனம் உருவாக முடியாது. மொழியின் அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாக முடியும். ஒரு தேசிய இன உருவாக்கத்திற்குக் கீழ்க்கண்ட 6 அம்சங்கள் காரணங்களாக உள்ளன.

1. நில எல்லை, 2. அரசு, 3. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை, 4. இலக்கிய உடைமை, 5. பொதுப் பழக்க வழக்கங்கள், 6. சமூக மரபு நிலை.
இந்த வரையறுப்பின் அடிப்படையில் தமிழர்கள் தனித்தேசிய இனத்தவரா? - என்ற வினாவிற்கான விடையை ஆராய்வோம்.

 
«தொடக்கம்முன்111112113114115116117118119120அடுத்ததுமுடிவு»

பக்கம் 113 - மொத்தம் 130 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 51 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்