நீதி தேவதை நடுங்குகிறாள்! - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2016 14:31 |
உலக நாடுகளில் மிகச் சிறந்த நூறு பல்கலைக் கழகங்களில் ஒன்றாக புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம் திகழ்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 70 பல்கலைக் கழகங்களுடன் உறவு பூண்டு மாணவர்கள் பரிமாற்றம், ஆய்வுகள் பரிமாற்றம் போன்றவற்றில் நிகரற்று விளங்குகிறது.
ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் குறிப்பாக மிகப் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் உயர் கல்வி கற்கிறார்கள். பருவம் ஒன்றிற்கு 220 ரூபாய் கட்டணம் மட்டுமே மாணவர்களிடம் வாங்கப்படுகிறது. சிறார் பள்ளிகளில்கூட பல்லாயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும் இக்காலக்கட்டத்தில் உயர் கல்வி குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் கிடைப்பது மாபெரும் சாதனையாகும்.
|
|
நேதாஜிக்கு அள்ளித் தந்த தமிழர்-லியோன் புருசாந்தி |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2016 14:21 |
ஆங்கிலத்தில் : ஜே.பி.பி. மேன் (பாரிஸ்) - தமிழாக்கம் : தமிழோசை க.விசயகுமார் பிறப்பு : 1901 மே 1 இறப்பு - 1969 - பிறந்த ஊர் : பாண்டிச்சேரி
வரலாற்றுப் பின்னணியும் உள்ளடக்கமும்
தமிழர்களுக்கு தென்கிழக்காசியா, சீனம் ஆகியவற்றுடன் மிக நீண்ட காலமாகவே வணிகம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள் இருந்து வந்துள்ளன. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பாக பத்தொன் பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பல ஆயிரம் தமிழர்கள் பர்மாவுக்கும் மலேசியாவுக்கும் தொழிலாளர்களாகச் சென்றனர்.
|
காலத்தால் உதவிய கனடா தமிழ் மாணவர்கள் : தமிழர் தேசிய முன்னணி நடத்திய வெள்ள நிவாரண மருத்துவ முகாம்கள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2016 14:14 |
கனடா நாட்டில் வாழும் தமிழ் இளந்தலைமுறையினருக்குத் தமிழர் வரலாறு, தமிழ்மொழி ,தமிழ் இலக்கியம்,தமிழர் கலைகள், தமிழ்ப் பண்பாடு மற்றும் விழுமியங்கள் முதலியன பற்றி அறிவூட்டி, அவற்றைப் பேணச் செய்யும் நோக்கோடு 1993 ஆம் ஆண்டுமுதல் கனடாத் தமிழ்க்கல்லூரி செயற்பட்டு வருகின்றது. இந்த நோக்கத்தை அடையும் பொருட்டாக இக்கல்லூரியானது தமிழ்த் தொடக்க நிலைப் பிரிவு, தமிழ் இடைநிலைப் பிரிவு, தமிழ்ப் பட்டப்படிப்புப் பிரிவு, தமிழ் நுண்கலைப் பிரிவு என நான்கு கற்கை நெறிப்பிரிவுகளையும் பதினாறு பள்ளிகளையும் கொண்டு இயங்கி வருகின்றது.
|
|
பள்ளிகளில் சமஸ்கிருதத் திணிப்புத் திட்டம் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 01 மார்ச் 2016 14:19 |
நாடெங்கிலும் உள்ள மத்திய அரசின் பள்ளிகளில் சமஸ்கிருதத்தை உள்ளடக்கிய மும்மொழிகளைக் கற்கும் திட்டத்தை மத்திய அரசு அமைத்த உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
|
மறைமலையடிகள் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது |
|
|
|
திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2016 12:12 |
தமிழ்க் கடல் மறைமலையடிகளாரால் திருவள்ளுவர் ஆண்டு 1947 (1916)இல் தோற்றுவிக்கப்பட்ட தனித்தமிழ் இயக்கம் திருவள்ளுவர் ஆண்டு 2047 (2016)இல் நூற்றாண்டைக் காண்கிறது. இந்த நூற்றாண்டு தொடக்க விழா மாநாட்டினை மிகச் சிறப்பாக நடத்துவது குறித்து ஆராய தமிழ் அமைப்புகள், தமிழறிஞர்கள், தமிழ்த் தொண்டர்கள் மற்றும் உணர் வாளர்கள் ஆகியோரின் கலந்தாய்வுக் கூட்டம் 07-02-2016 ஞாயிறு அன்று மாலை 3 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது. 150க்கும் மேற்பட்டவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
|
|
|
|
|
பக்கம் 118 - மொத்தம் 132 இல் |