தென்செய்தி
உலகத் தமிழர் பேரமைப்பு : தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:19

தஞ்சை: திருவள்ளுவராண்டு 2047 ஆடவை (ஆனி) 31 கடகம் (ஆடி) 1, 2 (2016 சூலை 15, 16, 17)

 
தமிழர் உணர்வுகளை டில்லி மதிக்க வேண்டும்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:14

தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு கூறியுள்ளார்.
"எமது நாட்டின் தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைகள் பற்றியும் வருங்காலம் பற்றியும் வெகுவாகச் சிந்தித்துச் செயலாற்றி வந்துள்ளீர்கள். தொடர்ச்சியாகச் சட்டசபையில் குரல் கொடுத்து வந்துள்ளீர்கள்.

 
"வரையா மரபின் மாரி'' ஓய்ந்தது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:03

கெழுதகை நண்பர் நா. அருணாசலம் அவர்களின் மறைவு தமிழுக்கும் தமிழருக்கும் பேரிழப்பாகும். இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. தமிழும் தமிழரும் தொய்வடைந்த காலக்கட்டங்களில் உணர்வும் ஊக்கமும் நிறைந்த தமிழர் ஒருவர் தோன்றி அந்தத் தொய்வை அகற்றித் தமிழையும் தமிழரையும் நிமிரச் செய்வர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைமலையடிகள் தோன்றி வடமொழி என்னும் முதலை வாயில் சிக்கிய தமிழை மீட்டார். தனித்தமிழ் இயக்கம் கண்டு தமிழர்களுக்கு உணர்வூட்டினார்.

 
சுமேரியர் பழந்தமிழரே - முனைவர் கீரைத் தமிழன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:05

வேர்களைத் தேடும் நமது பயணம் - நாம் இழந்தவைகள் இத்தனைதானா? அல்ல இன்னும் எத்தனையோ? என்ற ஏக்கத்தையும், பதைபதைப்பையும் என்னுள் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை! சுமேரியரைக் கடந்து வேறு நாகரிகங்களுக்குள் செல்லலாம் என்றால் உலகின் முதலும் முதன்மையுமான நாகரிகத்தைத் தந்த சுமேரியர்கள் "இன்னும் இன்னும் எங்களை எழுதுங்கள், நாங்கள்தான் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழர்'' என்று சொல்வது போல் என் மனக்கண்ணில் வந்து நின்று என்னை எழுதத் தூண்டுகிறது, நான் என்ன செய்ய? சரி உலக நாகரிகங்களுள் சற்றேறக்குறைய முழுமையாக வாசிக்கப்பட்டு வரலாறுகள் அறியப்பட்ட நாகரிகம் என்று சொன்னால் அது சுமேரியர் நாகரிகந்தான்.

 
வழக்கறிஞர்களின் போராட்டம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:00

நீதித் தராசின் இரு தட்டுகளாக நேர் நின்று நடுநிலை தவறாமலும் நேர்மையாகவும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளும், அவர்களுக்கு உதவ வேண்டிய வழக்கறிஞர்களும் மோதிக் கொள்ளும் வருந்தத்தக்கப் போக்கு உருவாகியுள்ளது.

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 106 - மொத்தம் 118 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.