தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
திருச்சியில்: தமிழ்த் தேசிய அமைப்புகளின் முற்றுகைப் போராட்டம் ஆயிரக்கணக்கானவர்கள் கைது PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 12:20

தமிழக உழவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் வகையில் நதிகளுக்கான ஒற்றைத் தீர்ப்பாயம் அமைப்பது, தமிழர்களின் மொழி உரிமையை நசுக்கும் வகையில் இந்தியை எல்லா வகையிலும் திணிப்பது, தமிழர்களின் தொன்மையான வரலாற்றை மூடிமறைக்கும் வகையில் மதுரை-கீழடி அகழாய்வை முடக்குவது போன்ற தமிழர் விரோத மனப்பான்மையுடன் ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து மத்திய மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதைக் கண்டிக்கும் வகையில் அனைத்து தமிழ்த் தேசிய அமைப்புகளும் ஒன்று கூடி கடந்த 31/05/2017 அன்று காலை 10:00 மணியளவில் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் திருச்சி வில்லியம் சாலையில் உள்ள மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்திய அரசுக்கு எதிரான அழுத்தமான தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.

 
முற்றுகைப்போராட்டக் கோரிக்கைகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 12:17

1. காவிரிப்படுகை உழவர்களின் வாழ்வை அழிக்காதே!

2002ஆம் ஆண்டிற்கு முன் தீர்ப்புகளை வழங்கிய நடுவர் மன்றங்களைத் தவிர காவிரி நடுவர் மன்றம் உட்பட அனைத்து நடுவர் மன்றங்களையும் கலைத்துவிட்டு ஒட்டுமொத்தமாக அனைத்து நதிநீர்ப் பிரச்சினைகளுக்கும் ஒற்றை நடுவர் மன்றம் அமைப்பதென இந்திய அரசு செய்துள்ள முடிவு காவிரிப் பாசன உழவர்களை மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும்.

 
குளச்சல் துறைமுகத் திட்டம் கைவிடப்படுகிறதா? பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 12:07

இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக கிழக்கு முனையத்தை சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டித் தர இந்திய அரசு ஒப்புக்கொண்டிருப்பதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரவி கருணாநாயகே அறிவித்துள்ளார். தில்லியில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஆகியோரைச் சந்தித்துப் பேசியபின் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 
மீண்டும் இந்தித் திணிப்பு - க. அனந்தகிருட்டிணன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 12:09

சமீபத்தல் ஆட்சி மொழி தொடர்பான நாடாளுமன்ற குழுவின் 117 பரிந்துரைகளுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததன் மூலம் இந்தியாவில் வாழும் சரிபாதிக்கும் மேற்பட்ட இந்தி பேசாத மாநிலங்களின் மீது தனது வகுப்பு வாதத் தாக்குதலை மோடியின் பா.ஜ.க. அரசு தொடுத்திருக்கிறது.

 
உலகப் பெருந்தமிழர் இரா.செழியன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017 11:52

மூத்தத் தலைவரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான இரா. செழியன் அவர்கள் காலமான செய்தி அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை அளித்துள்ளது. எளிமையும், பண்பாடும் நிறைந்தவர். இந்திய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய பணி குறிப்பாக அவசர நிலை காலத்தில் அதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் துணிகரமாக அவர் ஆற்றிய உரை என்றென்றும் நினைவு கூரப்படும். நெருக்கடி நிலை காலத்தில் நடைபெற்ற சனநாயகப் படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிநாயகம் ஜெ.சி. ஷா ஆணையம் அளித்த அறிக்கை வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையை துணிந்து அச்சிட்டு வெளியிட்ட பெருமை இரா. செழியன் அவர்களையே சாரும்.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 6 - மொத்தம் 51 இல்
காப்புரிமை © 2017 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 27 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்