தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
இந்தியத் தேசியம் ஒரு கற்பிதம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 16:14

இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் பல்வேறு மொழி வழித் தேசிய இனங்கள் குறிப்பிட்ட நிலப்பகுதிகளில் வாழ்கின்றன. ஆங்காங்கு வாழ்ந்த பண்டைய மக்களுடன் கலப்பெய்தியுள்ளனர். ஆனால் அமெரிக்க நாட்டைப் போல அங்குக் குடியேறிய எல்லா மொழிவழித் தேசிய இனங்களும் சிறிது சிறிதாகக் கலந்து அமெரிக்க தேசிய இனமாக உருவானதைப் போல இந்தியாவில் அனைத்து இனங்களும் கலந்து இந்தியத் தேசிய இனம் உருவாகவில்லை.

 
கடலோனியா நிகழ்வு மாபெரும் அரசியல் பிழை : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 16:10

கடலோனியாவில் உள்ள கம்யூனிஸ்டுகளும் சாதாரண குடிமக்களும் முழுக்க முழுக்க சட்டரீதியான அபத்தங்களையும் மிகமோசமான அரசியல் தவறையும் சந்தித்து வருகின்றனர். கடலான் ஜனநாயக அரசின் ஒன்பது உறுப்பினர்களை ஃபாசிஸ்ட் படைகள் சிறைபிடித்துள்ளன. கைது நடவடிக்கையைத் தொடர்ந்து நகரத் தந்தை அதா கொலாவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 
தாய்த்தமிழ் வழிக்கல்விப் பள்ளிகளைக் காக்க முன்வருக! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 15:59

உலக மயமாக்கல் கொள்கையை இந்தியா ஏற்றுக்கொண்டதின் விளைவாக முதலில் களபலியாக்கப்பட்டது கல்வியே ஆகும். தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை இலவசமாக இருந்த கல்வி வணிகமயமாகத் தொடங்கியது. குறிப்பாக 1970களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புற்றீசல் போல ஆங்கில வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

 
பழியைத் துடைப்பீர் - அறத்தைக் காப்பீர்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 டிசம்பர் 2017 16:05

இந்தியத் நீதித் துறை வரலாற்றிலும் மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பிலும் இதுவரை நிகழாத இரு நிகழ்ச்சிகள் நடைபெற்று அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளன.

இராஜீவ் கொலை வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் மூவர் கொண்ட ஆயத்திற்குத் தலைமை தாங்கிய நீதியரசர் கே.டி. தாமஸ் 18-10-17 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அதிர்ச்சிகரமான உண்மைகளை வெளியிட்டுள்ளார். அக்கடிதம் இப்போது 17-11-17 அன்று வெளியாகியுள்ளது.

 
தமிழீழத்தை அடைவோம் என்ற உறுதியும் நம்பிக்கையும் நமக்கு தேவை - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2017 12:52

இன்று ஈழ மண் எமது என்று நாம் உரிமை கொண்டாடுவதற்கான அத்தனை அடையாளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றைப் பற்றி விரிவாக நான் சொல்லத் தேவையில்லை. செய்திகளில் நீங்களே படித்திருப்பீர்கள். உங்கள் உறவுகளின் ஊடாக அறிந்தும் இருப்பீர்கள். ஒரு சிலர் நேரடியாக சென்று பார்த்தும் வந்திருப்பீர்கள்.

இந்த நிலையில் நாம் செய்யக் கூடியது என்ன? செய்யக் கூடியது ஏதேனும் உள்ளதா? அதுவும் இத்தனை மைல்கள் தள்ளி நின்று நம்மால் என்ன செய்ய முடியும்?

இந்தக் கேள்விகளுக்கான விடையைக் காணும் முன், அதாவது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முன், நாம் தீர்மானிக்க வேண்டியது நமது  செயல்கள் எதை நோக்கி இருக்க வேண்டும். அதாவது, நம் இலக்கு எதுவாக இருக்க வேண்டும்.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 9 - மொத்தம் 65 இல்
காப்புரிமை © 2018 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 18 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்