தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
"உரிமைகளை நிலை நிறுத்திய உன்னதத் தீர்ப்புகள்'' நூல் வெளியீட்டு விழா! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:45

நாள் : 06-08-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி
இடம் : இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை-600 008.

வரவேற்புரை : நெ. பூங்குழலி
தொகுப்புரை : திரு. செ.ப. முத்தமிழ்மணி
தலைமை : நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள்
நூல் வெளியிடுபவர் : பேரா. கல்விமணி அவர்கள்

 
தமிழ்த் தேசியப் போராளி பரந்தாமன் திடீர் மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:38

50 ஆண்டு காலமாக வானில் பறக்கும் பறவையின் நிழல் நிலத்தில் படிந்து மேடு, பள்ளங்களிலும் தொடர்வதைப்போல அடக்கு முறைகளிலும், சிறைவாசங்களிலும் இடை விடாது என்னைப் பின்தொடர்ந்த அருமைத் தோழர் கா. பரந்தாமன் திடீரென கடந்த 29-6-2017 அன்று மறைந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை.

பெருந்தலைவர் காமராசரின் தலைமையை ஏற்று இளைஞர் காங்கிரசில் மானாமதுரை பொறுப்பாளராக இருந்த காலம் முதல் அவர் மறையும் காலம் வரை என்றும் வற்றாது ஊற்றெடுக்கும் அன்போடு நட்புறவு கொண்டிருந்தார்.

 
மாநிலங்களின் உரிமைகளை மதிக்காத ஆளுநர்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:27

இந்திய நாட்டின் அரசியல் சட்டம், குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் ஆகியோருக்குள்ள அதிகார எல்லைகளைத் திட்டவட்டமாக வரையறுத்துள்ளது. அதைப்போலவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையமைச்சர், மாநில முதலமைச்சர்கள் ஆகியோருக்குள்ள அதிகாரங்களையும், பொறுப்புகளையும் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

 
பன்முகக் கலைஞர் வீர. சந்தானம் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:36

1983ஆம் ஆண்டில் இலங்கையில் கருப்பு சூலையில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் சூழ்ந்த நேரத்தில் ஓவியர் வீர. சந்தானம் என்னுடன் அறிமுகமானார். ஈழத் தமிழர் படுகொலை குறித்து அவர் தீட்டிய உயிரோவியங்கள் அடங்கிய கண்காட்சித் திறப்பு நிகழ்ச்சியில் பங்குபெறுமாறு அழைத்திருந்தார். அவர் வரைந்த ஓவியங்கள் கண்டோரைக் கண் கலங்க வைத்தன.

 
கதிராமங்கலம் மக்கள் பிரச்சனை... தமிழக அரசியலில் புதிய வரலாறு படைப்பு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி ஆதரவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017 14:23

"கதிராமங்கலம் பிரச்சனையில் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் ஒன்றுபடுத்தி வரவழைத்த கதிராமங்கலம் மக்களை மனமாறப் பாராட்டுகிறேன். மாநில ஆளுங்கட்சி,  மத்திய ஆளுங்கட்சி ஆகியவற்றைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சித் தலைவர்களும் கைகோர்த்து இம்மேடையில் தோன்றியுள்ளனர். தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் உருவாகி உள்ளது. அதற்கான பெருமை இம்மக்களையே சாரும்.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 8 - மொத்தம் 55 இல்
காப்புரிமை © 2017 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 45 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்