தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
கதிராமங்கலம் போராளிகள் பிணையில் விடுதலை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:36

கதிராமங்கலம் காக்கப் போராடியதற்காகப் பொய் வழக்குகள் புனையப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச் சுடர் மற்றும் கதிராமங்கலம் தோழர்கள் கா. தருமராசன், இரா. முருகன், சு. சிலம்பரசன், ரெ. செந்தில்குமார், சே. சந்தோஷ், ப. சாமிநாதன், கோ. ரமேஷ், இரா. வெங்கட்ராமன் ஆகிய 10 தோழர்கள் 11-08-2017 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

 
"நெடுமாறன் தொடுத்த வழக்குகள் ஒன்றில்கூட தோற்றதில்லை'' நீதிநாயகம் கே. சந்துரு பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:32

தமிழ்க்குலம் பதிப்பாலயம் வெளியிட்ட "உரிமைகளை நிலை நிறுத்திய உன்னதத் தீர்ப்புகள்' நூல் வெளியீட்டு விழா. 06--08--2017 - ஞாயிறு அன்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள் தலைமையேற்றார். பேரா. கல்விமணி அவர்கள் நூலை வெளியிட்டார். திருவாளர்கள் என். சந்திரசேகரன், பெ. மணியரசன், எம்.வி.கே. நிசாமுதீன், வழக்கறிஞர் ச. செளந்திரபாண்டியன், மரு.அ. தாயப்பன் ஆகியோர் உரையாற்றினர். மொழி பெயர்த்த திருவாட்டி தமித்தலட்சுமி ஏற்புரையாற்றினார்.  திரு. பழ. நெடுமாறன் அவர்கள் சிறப்புரையாற்றினார். திரு. பா. இறையெழிலன் நன்றி நவின்றார்.

 
தமிழக மாணவர்கள் தலையில் பேரிடி பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:27

நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைச் சேர்க்க முடியும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் ஆணை தமிழக மாணவர்களின் தலையில் பேரிடியாக இறங்கியுள்ளது.

 
பேராசிரியர் கல்விமணியின் தன்னலமற்ற தொண்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:31

பேராசிரியர் கல்விமணி அவர்கள் தன்னை முழுமையாக மக்கள் தொண்டிற்காக அர்ப்பணித்துக்கொண்டவர். குறிப்பாக பழங்குடி மக்களின் உயர்வுக்காக அயராது தொண்டாற்றி வருபவர். அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் தகர்த்து அவருடைய தொண்டு தொடர்வதற்கு துணைபுரிந்த பெருமை மதிப்பிற்குரிய கே. சந்துரு அவர்களைச் சாரும்.

 
தரமற்ற கல்வியால் தாழ்ந்த தமிழகம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:23

தமிழ்நாட்டில் 552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலுக்காக 4 துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாகும். 20 கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாகும். எஞ்சிய 495 கல்லூரிகள் சுயநிதிக் கல்லூரிகளாகும். பாலிடெக்னிக் கல்லூரிகள் 419, கட்டட வடிவமைப்புக் கல்லூரிகள் 21 உள்ளன.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 2 - மொத்தம் 51 இல்
காப்புரிமை © 2017 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 38 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்