தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
தமிழ்வழிக் கல்விக்காக பேசா நோன்புப் போராட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2019 12:06

திருப்பூர் இயற்கை வாழ்வகம் நிறுவனர் க. இரா. முத்துச்சாமி  அவர்கள் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தொடக்க நிலை முதல்  இறுதி நிலை வரை அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கவேண்டும் என்ற  கோரிக்கையை முன்  வைத்து 24-03-2018 முதல் பேசா நோன்புப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். 

 
ஸ்டெர்லைட் விரட்டப்பட வேண்டும்! ஏன்? -ஆர்.கே. PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2019 12:00

ஆசுதிரேலியா  உள்ளிட்ட அந்நிய நாடுகள் சிலவற்றிலிருந்து அங்கு  வெட்டி எடுக்கப்படும் தாமிரத் தாதுவை கப்பல் மூலம் எடுத்து வந்து கழிவுகளை நீக்கி சுத்தத் தாமிரமாகப் பிரித்து அதனை மீண்டும் அந்நாடுகளுக்கே அனுப்பி வைப்பதுதான் ஸ்டெர்லைட் ஆலையின் வேலை.

 
தஞ்சையில் முப்பெரு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:35

உலக மகளிர் நாள் விழா, உலகத் திருக்குறள் மாமன்றம், புரட்சிக்கவி அறக்கட்டளை ஆகிய இயக்கங்களின் மூன்றாம் ஆண்டு விழா ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்பட்டன.

 
நீதித் தூண் சாய்ந்தால் ஜனநாயகம் சரியும்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2019 11:32

என்றும் வழுவாத நீதி நெறிமுறையைக் கொண்ட சமுதாயத்தை மட்டுமே நாகரிக சமுதாயமாகக் கருத முடியும். நீதித்துறை சுதந்திரமாகவும், செயல்திறன் கொண்டதாகவும் விளங்கினால்தான் ஜனநாயக நாடு என்பதற்கு பொருள் இருக்க முடியும்.

 
தமிழர் தேசிய முன்னணி தலைமைச் செயற்குழு கூட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 02 ஏப்ரல் 2019 11:33

16-03-2019 காரிக்கிழமை  அன்று காலை 11 மணிக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் புதுச்சேரி சோழியச் செட்டியார்கள் சமூகக் கூடத்தில் நடைபெற்றது.  பொதுச் செயலாளர் ந.மு. தமிழ்மணி அனைவரையும் வரவேற்றார். தலைமை தாங்கிய "பழ. நெடுமாறன்" நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், நமது கட்சி கடைப்பிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்தும் அவரவர்களின் கருத்துகளை சுருக்கமாகக் கூறுமாறு வேண்டிக் கொண்டார்.  
அதைத் தொடர்ந்து மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள், சிறப்பு  அழைப்பாளர்கள் ஆகியோர் பேசினர். இறுதியாக தலைவர் பழ. நெடுமாறன் கருத்துரை வழங்கினார். நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை தலைவருக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுவை மாநிலத்  தலைவர் துறை. மாலிறையன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 10 - மொத்தம் 87 இல்
காப்புரிமை © 2020 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 21 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்