கட்டுரைகள்
முதலமைச்சர் மன்னிப்புக் கேட்கவேண்டும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 09 அக்டோபர் 2010 21:08
மாநில அரசுகளின் நிர்வாகத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகிய இரு பதவிகள் மிக உயர்ந்த பதவிகள் ஆகும். நிர்வாகத்திற்குத் தலைமைச் செயலாளரும் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதில் காவல்துறைத் தலைமை இயக்குநரும் பொறுப்பாளர்கள் ஆவார்கள்.
 
முதல்வரின் மனு நீதி PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 21 ஆகஸ்ட் 2010 21:03
இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு (Steel Frame) என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். தேர்வுக்குப் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டார்கள். ஐ.சி.எஸ். பயிற்சிக்கான கல்லூரி இலண்டனில் மட்டுமே இருந்தது. தொடக்கக் காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே இதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.
 
திருத்திக் கொள்ள முடியாத அதிகாரத் திமிர் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 08 ஜூலை 2010 20:30
தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் அணிசேர முயல்வதை நான் குறைகூறவில்லை. ஆனால் கொள்கை அடிப்படையில் அல்லது குறைந்தபட்ச வேலைத் திட்ட அடிப்படையில் கூட்டணி சேர்வது என்பது போய் பதவிப் பங்கீட்டின் அடிப்படையில் கூட்டணிகள் அமைக்கப்படுவது என்பது மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகிவிட்டது. இதற்காக யாரை யார் நொந்துக்கொள்வது?
 
ஐ.நா.விற்குச் சாவுமணி அடிக்க முயற்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 27 ஜூலை 2010 20:50
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஐ.நா. மன்றம் மூவர் அடங்கிய ஒரு குழுவை அமைத்துள்ளது.
இந்தோனேஷியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் மருசுகிடருஸ்மா குழுவின் தலைவராகவும் தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்க வழக்கறிஞர் ஸ்டிவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட இந்தக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கீ-மூன் அறிவித்துள்ளார். இக்குழுவில் மேலும் சிலர் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
பலிக்கடாவாகும் ஈழத் தமிழர்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 14 ஜூன் 2010 12:53
2009ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதியன்று இலங்கை நாடாளுமன்றத்தில் போரில் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் இலங்கை அதிபர் இராசபக்சே பேசும்போது "இந்தியாவின் போரையே நான் நடத்தினேன்'. என பகிரங்கமாக அறிவித்தார்.
இந்திய அமைதிப்படை என்ற பெயரால் இந்திய இராணுவத்தை அனுப்பிச் சாதிக்க முடியாததை தான் சாதித்ததாக மறைமுகமாகக் கூறினார்.
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 10 - மொத்தம் 13 இல்
காப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.