|
ஒரு இலட்சம் பேர் திரண்டெழுந்த கனடா மாவீரர் தினம் - இயக்குநர் வ. கெளதமன் |
|
|
|
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00 |
இதே போன்று ஒரு உறைந்த மனோநிலையையோ, உணர்வு நிலையையோ இதற்குமுன்பு என் மனம் அடைந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பனிகொட்டும் அதிகாலையில் அதுவும் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு பெரும் அரங்கில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அசைவற்று நின்றுகொண்டிருக்க, "தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...'' பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் சிறுகச் சிறுக நெஞ்சம் விம்மி பாடல் வரிகளுக்கான காட்சிகள் விரிந்து போர்க்களமும், வீர மரணங்களும், நடுகல் (மாவீரர் கல்லறை) வழிபாடும் வந்து வந்து போய் இசை முடியும் நேரம் தளம் கட்டி நின்ற கண்ணீர் உடைந்து கொண்டு ஒவ்வொருவர் கன்னங்களிலும் உருண்டோடிக் கொண்டிருந்தது. நானும் எனது கண்களை துடைத்தபடியே மாவீரர்களின் படவரிசையினைப் பார்க்க அவர்கள் அத்தனைபேரும் அலங்கரிக்கப்பட்ட பூக்களுக்கிடையே என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னைப்பார்த்து மட்டுமல்ல உலகத்திலுள்ள அத்தனைத் தமிழர்களையும் பார்த்து சிரிப்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். "இரண்டாயிரத்து ஒன்பது "மே' மாதம் வரை உறுதியோடு நாங்கள் போராடி உயிரை விட்டோமே அதற்குப் பின்பு எட்டு ஆண்டுகள் நீங்கள் தேசியத்திற்காக என்ன செய்தீர்கள்?'' என்று நாம் வெட்கப்பட்டு கூனிக்குறுக அவர்கள் கேள்வி கேட்பதாகத்தான் உணர்ந்தேன்.
|
பொங்கல் பெருநாள் தமிழர் திருநாள் - பேரா. மு. அறிவரசன் |
|
|
|
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00 |
பழங்காலத்தில் தமிழரின் தொடர் ஆண்டாகக் கலி - ஆண்டு நடைமுறையில் இருந்தது. தமிழர் தாயகத்தின் கல்வெட்டுக்களில் கலி - ஆண்டு பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது. ஈழத்தமிழரிடையே இன்றும் கலி - ஆண்டு நடைமுறையில் இருக்கிறது.
|
|
வேலி தாண்டும் வெள்ளாடுகள்! - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00 |
மேய்ப்பவன் சிறிது அயர்ந்தால் வெள்ளாடுகள் வேலியைத் தாண்டி வயலுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்துவிடும். இப்போது தமிழகத்தில் இதுதான் நடந்துள்ளது. மணல் கொள்ளையில் தொடர்புடைய சேகர் ரெட்டி வீட்டில் நடைபெற்ற வருமானவரி சோதனையில் தங்கக் கட்டிகள், கட்டு கட்டாகப் பணம் மற்றும் ஆவணங்கள் கிடைத்திருக்கின்றன. அந்த ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த இராம்மோகன்ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் வருமானவரி அதிகாரிகள் சோதனை யிட்டிருக்கிறார்கள்.
|
மொழி, இனம், நாடு, சமயம் கடந்த நூல் திருக்குறளே மதுரை திருவள்ளுவர் கழகத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு பவள விழாவில் பழ.நெடுமாறன் பேச்சு |
|
|
|
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00 |
மதுரை திருவள்ளுவர் கழகத்தின் 75ஆம் ஆண்டு நிறைவு பவள விழா மதுரையில் மிகச்சிறப்பாக சனவரி 14 முதல் 18 வரை நடைபெற்றது. சனவரி 18ஆம் நாள் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு பொ.தி.ரா. கலை விசயராசன் தலைமை தாங்கினார். கழக ஆட்சித் தலைவர் முனைவர் இராம. பாண்டுரங்கன் வரவேற்புரை நிகழ்த்தினார். விழாவில் பழ.நெடுமாறன், சுந்தர.மோகன்காந்தி, தா.இரா. தினகரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
|
|
|
|
|
பக்கம் 92 - மொத்தம் 119 இல் |