தென்செய்தி
வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00

2016ஆம் ஆண்டுக்குரிய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் அவருக்கு நமது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 
வேத மரபை மறுத்தவர் வள்ளலார் - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00

வள்ளலாரைப் பற்றிப் படிக்கத் தொடங்கிய போது முதலில் என்னை ஈர்த்த செய்தி, 1935-ஆம் ஆண்டு, அருட்பா-ஆறாம் திருமுறையிலிருந்து நூறு பாடல்கள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவருகின்றன. அதைத் தொகுத்தவர் சாமி. சிதம்பரனார். வெளியிட்டது குடி அரசு பதிப்பகம். இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு என்னும் பெயரில் தனது குடிஅரசுப் பதிப்பகத்தின் மூன்றாவது வெளியீடாகப் பெரியார் இதனை வெளியிடுகிறார். இக்கருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கில் குடிஅரசு பத்திரிகையின் சந்தாதாரர்களுக்கு முக்கால் விலைக்கு வழங்கியிருக்கிறார் பெரியார். இது குறித்துக் குடிஅரசு பத்திரிகையில் அவ்வப்போது விளம்பரமும் செய்துள்ளார் பெரியார்.

 
தீரமிக்க தலைவி மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:56

தமிழக முதல்வர் செல்வி செயலலிதா அவர்களின் மறைவு தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பின்னர் அவரால் உருவாக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க.வை கட்டுப்பாடு குலையாமல் கட்டிக் காத்து ஐந்து முறை ஆட்சியில் அமர்த்தியதற்கு அவரது தலைமையே காரணமாகும். கட்சியையும், ஆட்சியையும் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இரும்புப் பெண்ணாக இறுதிவரை திகழ்ந்தார்.

 
தமிழனுக்குப் பெருமை சேர்த்திருக்கும் தமிழன் புலிட்சர் விருதுபெற்ற பழனிக்குமணன் பாராட்டு விழாவில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் புகழாரம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00

அமெரிக்காவின் மிக உயரிய விருதான புலிட்சர் விருதை பெற்றதால் நெ. பழனிக்குமணன், தமிழனுக்குப் பெருமை சேர்த்த தமிழனாகிறார் என்றார் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன்.

புலிட்சர் விருதுபெற்ற மதுரை மென்பொறியாளரும் உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் மகனுமான நெ. பழனிக்குமணனுக்கு மதுரையில் 16-12-2016 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையுரையாற்றிப் பேசியது.

 
மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:55

தன்னுடைய பேச்சாலும், எழுத்தாலும் தமிழக மக்களின் மனம் கவர்ந்த கவிஞர் இன்குலாப் காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம்.

தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான இன்குலாப் சென்னையில் உடல்நலக் குறைவால் டிசம்பர் முதல் தேதியன்று காலமானார். 73 வயது நிரம்பிய அவரின் இயற்பெயர் சாகுல் அமீது என்பதாகும். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்த இவர் சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றினார்.

 
«தொடக்கம்முன்919293949596979899100அடுத்ததுமுடிவு»

பக்கம் 94 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.