காவிரி-அனைத்துக்கட்சி - அனைத்து உழவர் சங்கங்களின் போராட்டம்! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:17 |
மயிலாடுதுறை
16-09-2016 அன்று தமிழகம் எங்கும் அனைத்துக்கட்சிகள், அனைத்து உழவர் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற கடையடைப்புப் போராட்டத்திலும், ஆர்ப்பாட்டங்களிலும் தமிழர் தேசிய முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றார்கள். விவரம் வருமாறு:
|
|
பேரறிவாளன் மீது தாக்குதல் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:15 |
செய்யாத குற்றத்திற்காக கடந்த 25 ஆண்டு காலத்திற்கு மேலாக வேலூர் சிறையில் வாடிவரும் பேரறிவாளன் சிறைவாசி ஒருவரால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். சிறையிலேயே பாதுகாப்பற்ற நிலை இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதற்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.
|
சென்னை, தஞ்சை, மதுரையில் செப்டம்பர் 24 ஆம் நாள் தமிழர் தேசிய முன்னணியின் ஆர்ப்பாட்டம்-தமிழர்களே பங்கேற்பீர்! |
|
|
|
சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2016 12:56 |
தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் ஏதிலியர்கள் முகாம்கள் என்ற பெயரில் எவ்வித உரிமைகளும் இல்லாமலும் போதுமான உணவு மற்றும் சுகாதார வசதிகள் இல்லாமலும், குழந்தைகளுக்கு போதுமான கல்வி வசதி இல்லாமலும், வெளியே சென்று வேலை பார்க்க அனுமதிக்கப்படாமலும் சொல்லொணாத துன்பங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். இதற்குக் காரணம் ஐ.நா. ஏதிலியர் பட்டயத்தில் இந்திய அரசு கையெழுத்திட மறுத்து வருவதால் இவர்கள் சட்டத்திற்குப் புறம்பாக குடியேறியவர்கள் என இந்திய அரசு கூறுகிறது.
|
|
படித்தேன் படியுங்கள்... ஈழத்தில் வாழ்ந்தேன் இரண்டாண்டுகள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 04 அக்டோபர் 2016 16:11 |
தமிழீழத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துகொண்டிருந்தபோது துணிந்து அங்குச் சென்று இரண்டாண்டுகள் தங்கியிருந்து விடுதலைப் புலிகளுக்கும் பிறருக்கும் தமிழைக் கற்பித்தவர்தாம் பேராசிரியர் அறிவரசன்.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி, இவரிடம் தமிழ் கற்ற மாணவியாவார்.
|
காவிரி-தமிழகத்திற்குக் கேடு விளைவிக்கும் இந்தியத் தலைவர்கள் - பழ. நெடுமாறன் |
|
|
|
சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2016 12:54 |
காவிரிப் பிரச்சினையில் தமிழக உழவர்களும் கட்சிகளும் இணைந்து நடுவர் மன்றமும் உச்சநீதிமன்றமும் அளித்தத் தீர்ப்புகளை நிறைவேற்றுமாறு இந்திய அரசை வற்புறுத்திப் போராட்டம் நடத்தினர். தமிழக அரசும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.
உச்சநீதிமன்றம் தலையிட்டு "வாழு, வாழ விடு'' என்ற அடிப்படையிலும் நடுவர் மன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையிலும் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்குமாறும் முதல் கட்டமாக 13 டி.எம்.சி. நீரை வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.
|
|
|
|
|
பக்கம் 114 - மொத்தம் 132 இல் |