புதன்கிழமை, 06 ஜூலை 2016 16:10 |
தகுதி மிகுதிகொள் தண்டமிழ்ப் பெரும்புலவர் நூற்கடல் திருமிகு. தி.வே. கோபாலையர் போன்றோரிடம் செந்தமிழ் பயின்ற புலவர் திரு. பெ. சயராமன் தன் நுண்மாண்நுழைபுலத் திறனால் ஆய்ந்த ஒப்பரிய ஓர் ஒப்பாய்வு நூலைத் தமிழர்கட்குத் தந்துள்ளார். அது, "தக்கயாகப் பரணி யுடன் இரணியவதைப் பரணி - ஓர் ஒப்பாய்வு'' என்பதாம். இந்நூலாசிரி யரின் ஆழ்ந்து அகன்ற பன்னூலறிவை நூலின் வழிப் படமாகப் பார்க்க முடிகிறது.
|
|
உலகத் தமிழர் பேரமைப்பு : தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:19 |
தஞ்சை: திருவள்ளுவராண்டு 2047 ஆடவை (ஆனி) 31 கடகம் (ஆடி) 1, 2 (2016 சூலை 15, 16, 17)
|
சுமேரியர் பழந்தமிழரே - முனைவர் கீரைத் தமிழன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:05 |
வேர்களைத் தேடும் நமது பயணம் - நாம் இழந்தவைகள் இத்தனைதானா? அல்ல இன்னும் எத்தனையோ? என்ற ஏக்கத்தையும், பதைபதைப்பையும் என்னுள் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை! சுமேரியரைக் கடந்து வேறு நாகரிகங்களுக்குள் செல்லலாம் என்றால் உலகின் முதலும் முதன்மையுமான நாகரிகத்தைத் தந்த சுமேரியர்கள் "இன்னும் இன்னும் எங்களை எழுதுங்கள், நாங்கள்தான் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி தமிழர்'' என்று சொல்வது போல் என் மனக்கண்ணில் வந்து நின்று என்னை எழுதத் தூண்டுகிறது, நான் என்ன செய்ய? சரி உலக நாகரிகங்களுள் சற்றேறக்குறைய முழுமையாக வாசிக்கப்பட்டு வரலாறுகள் அறியப்பட்ட நாகரிகம் என்று சொன்னால் அது சுமேரியர் நாகரிகந்தான்.
|
|
தமிழர் உணர்வுகளை டில்லி மதிக்க வேண்டும்! - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:14 |
தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு இலங்கையின் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேசுவரன் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு கூறியுள்ளார். "எமது நாட்டின் தமிழ்ப்பேசும் மக்களின் உரிமைகள் பற்றியும் வருங்காலம் பற்றியும் வெகுவாகச் சிந்தித்துச் செயலாற்றி வந்துள்ளீர்கள். தொடர்ச்சியாகச் சட்டசபையில் குரல் கொடுத்து வந்துள்ளீர்கள்.
|
"வரையா மரபின் மாரி'' ஓய்ந்தது - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:03 |
கெழுதகை நண்பர் நா. அருணாசலம் அவர்களின் மறைவு தமிழுக்கும் தமிழருக்கும் பேரிழப்பாகும். இந்த இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. தமிழும் தமிழரும் தொய்வடைந்த காலக்கட்டங்களில் உணர்வும் ஊக்கமும் நிறைந்த தமிழர் ஒருவர் தோன்றி அந்தத் தொய்வை அகற்றித் தமிழையும் தமிழரையும் நிமிரச் செய்வர். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மறைமலையடிகள் தோன்றி வடமொழி என்னும் முதலை வாயில் சிக்கிய தமிழை மீட்டார். தனித்தமிழ் இயக்கம் கண்டு தமிழர்களுக்கு உணர்வூட்டினார்.
|
செவ்வாய்க்கிழமை, 21 ஜூன் 2016 12:30 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 119 - மொத்தம் 132 இல் |