|
சமற்கிருதப் பிடியிலிருந்து தமிழை மீட்டார் மறைமலையடிகள் - ஆங்கில ஆளுமையை அகற்றிவிட அணி திரள்வோம்! |
|
|
|
புதன்கிழமை, 06 ஜூலை 2016 16:31 |
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் அந்த இனத்தின் மொழியையும், பண்பாட்டையும் அழிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அந்த இனம் சிறிது சிறிதாக மறைந்தே போகும்.
தொல்காப்பியர் காலத்தில் தொடங்கி நமது தமிழை அழிக்க வடமொழி இடைவிடாமல் முயன்று வந்திருக்கிறது. சங்க நூல்களில் வடமொழிச் சொற்கள் மிகக்குறைவு. சங்க காலத்தையொட்டி தொடர்ந்த காலக் கட்டத்தில் தமிழில் கலக்கப்பட்ட வடமொழி சொற்களின் தொகை நாளுக்கு நாள் மிகுந்துகொண்டே வந்து மணிப்பிரவாள நடையாக மாறி 14, 15, 16 ஆம் நூற்றாண்டுகளில் தமிழில் நூற்றுக்கு 70 சதவிகிதத்திற்கு மேல் வடசொற்கள் கலந்து செந்தமிழின் சிறப்பைச் சிதைத்துவிட்டன.
|
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு |
|
|
|
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 00:00 |
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு - உலகத் தமிழர் பேரமைப்பு 9ஆம் மாநாடு அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம், (பழைய பேருந்து நிலையம் அருகில்) தஞ்சை.
|
சனிக்கிழமை, 16 ஜூலை 2016 16:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
எஸ்.வி.ஆர். ஆவணப் படத்திற்குத் தடை - கருத்துரிமை மீதான கடும் தாக்குதல் |
|
|
|
புதன்கிழமை, 06 ஜூலை 2016 16:28 |
"உன்னுடைய கருத்தை வரிக்கு வரி நான் மறுக்கின்றேன். ஆனல், அந்தக் கருத்தை நீங்கள் வெளியிடுவதற்கான சுதந்திரத்தைப் பெற்றுத் தருவதற்காக எனது உயிரையும் தர ஆயத்தமாக இருக்கிறேன்'' என்றார் வால்டேர். ஓர் உண்மையான சனநாயகத்தில் இத்தகைய ஆரோக்கியமான அணுகுமுறைதான் இருக்க வேண்டும்.ஆனால் நிலவும் சமூக வெளியில் தனக்கு உவப்பாக இல்லாத கருத்தை ஒருவர் வெளியிடுவதை ஒரு சிறிதும் சகித்துக்கொள்ள முடியாத அவல நிலைதான் தமிழகத்தில் நடைமுறையாக உள்ளது. இதன் வெளிப்பாடுதான் 2016 சூன் 4ஆம் நாள் சென்னையில் "இடது' காலண்டிதழ் சார்பாக வெளியிடப்படுவதாக இருந்த மனித நேயப் போராளி தோழர் எஸ்.வி.ஆர். என்னும் ஆவணப்படத்திற்குக் காவல்துறையினரால் மிக அவசரமாக விதிக்கப்பட்ட தடையாகும்.
|
கனவு மெய்ப்பட வேண்டும் - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 06 ஜூலை 2016 16:13 |
ஐரோப்பாவின் ஆம்ஸ்டர்டாம் மற்றும் ஆசியாவின் சிங்கப்பூர் ஆகிய இரண்டு துறைமுகங்களுக்கு இணையாகத் தமிழ்நாட்டில் குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மிகப் பெரிய சர்வதேச சரக்குப் பெட்டகத் துறைமுகமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது.
|
|
|
|
|
பக்கம் 118 - மொத்தம் 132 இல் |