ஈழத்தமிழ் ஏதிலியர் உரிமையுடன் வாழ ஐ.நா. ஏதிலியர் பட்டயத்தில் இந்திய அரசே கையெழுத்திடு - பூங்குழலி |
|
|
|
சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2016 12:38 |
அய். நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஒருங்கிணைப்பில் நடக்கும் ்குறிப்பிட்ட கால இடைவெளியிலான உலகளாவிய மறு ஆய்வு் இந்த ஆண்டு நடக்க உள்ளது. இது உலக அளவில் மனித உரிமைகள் சார்ந்து நடக்கும் முகாமையானதும் ஆக்கரீதியானதுமான செயற்பாடு ஆகும்.
ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒரு முறை உலக நாடுகள் தத்தமது நாட்டின் மனித உரிமைச் சூழலை ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்ளும். இதனையே ்குறிப்பிட்ட கால இடைவெளியிலான உலகளாவிய மறு ஆய்வு” – Universal Periodic Review (UPR) என்று அழைப்பார்கள். இந்த ஆய்வுக்கு ஒவ்வொரு நாடும் மிகுந்த முகாமையைக் கொடுக்கும்.
|
ஞாயிற்றுக்கிழமை, 14 மே 2017 12:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
தமிழக மக்களின் மூன்று கேள்விகள் - பழ. நெடுமாறன் |
|
|
|
சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2016 12:30 |
இந்திய அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான வெங்கையா (நாயுடு) "காவிரிப் பிரச்சினையில் சட்ட முறையிலான தீர்வு காண வேண்டும்'' என கூறியுள்ளார்.
காவிரிப் பிரச்சினையில் கர்நாடக அரசும், இந்திய அரசும் தொடர்ந்து சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல் சட்டத்தை எவ்வாறெல்லாம் துச்சமாக மதித்துத் தூக்கியெறிந்து தமிழகத்தை வஞ்சித்தன, தொடர்ந்து வஞ்சித்து வருகின்றன என்பதை கீழ்க்கண்ட உண்மைகள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
|
தமிழர் தேசிய முன்னணி கட்சித் தேர்தல் |
|
|
|
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:32 |
அன்பார்ந்த தோழர்களே!
நமது தமிழர் தேசிய முன்னணியின் உறுப்பினர் சேர்க்கை 31-08-2016 அன்றோடு நிறைவடைகிறது என்பதை அனைவரும் அறிவோம். செப்டம்பர் திங்களில் கீழ்க்காணும் நாள்களில் ஏற்கெனவே அறிவித்தபடி தேர்தல் நடத்தப்பெற வேண்டும். தேர்தல் பொறுப்பாளர்கள் அவரவர்க்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் முறையாக அறிவிப்புச் செய்து குறைவேதுமின்றி தேர்தலை நடத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பட்டியலைத் தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் நடக்கும் இடம், முகவரியினை முன்கூட்டியே தலைமைத் தேர்தல் அலுவலருக்கும், அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் தெரிவிக்க வேண்டும்
|
|
தடுப்பூசி என்ற பெயரால் கொடிய கொலை ஊசி கமுக்கமாக நடைபெறும் தமிழின அழித்தொழிப்பு! - பூங்குழலி |
|
|
|
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:33 |
2009 மே மாதம் 16-ஆம் தேதியுடன் போர் முடிந்து விட்டது என இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இனி அரசியல் தீர்வு, நல்லிணக்கம் ஆகியவற்றைப் பேசினால் போதுமானது என்கிறது இலங்கை அரசு.
ஆனால் 2009 மே மாதம் வரை கன ரக ஆயுதங்களைக் கொண்டு வெளிப்படையான இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை அரசு அதன் பிறகு அதி தீவிர இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளது.
|
மனுநீதிச் சோழன் திகைக்கிறான்! - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 15:29 |
நீதித் தராசின் இரு தட்டுகளாக நேர் நின்று நடுநிலை தவறாமலும் நேர்மையாகவும் மக்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளும், நீதியைக் காண அவர்களுக்கு உதவ வேண்டிய வழக்கறிஞர்களும் ஒருவருடன் ஒருவர் மோதிக் கொண்டு கடந்த 60க்கும் மேற்பட்ட நாட்களாக தமிழ்நாட்டில் எந்த நீதிமன்றமும் செயற்பட முடியாத வருந்தத்தக்கப் போக்கு உருவாகியுள்ளது.
|
|
|
|
|
பக்கம் 115 - மொத்தம் 132 இல் |