தென்செய்தி
நெய்வேலி நிறுவனப் பங்குகளை தமிழக அரசே வாங்க வேண்டும்! முதல்வருக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 01 நவம்பர் 2017 12:25

நெய்வேலி நிலக்கரிச் சுரங்க நிறுவனத்தின் 15% பங்குகளை தனியாருக்கு விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சோசலிசத் திட்டத்தின்படி பொதுத்துறை நிறுவனங்கள் அரசால் அமைக்கப்பட்டன. ஆனால், அவைகளை சிறிது சிறிதாக தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 
கோயில்கள் தமிழ்நாட்டின் கலைக் கருவூலங்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 15:36

2017ஆம் ஆண்டு நடப்பு அக்டோபர் மாதத்தில் அடுத்தடுத்து வெளியான மூன்று செய்திகள் தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருக்கின்றன.

"அக்டோபர் 3 ஆம் தேதி இராமேசுவரம் இராமநாதசுவாமி கோவிலில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் வைரத்தாலி, வைரப்பல்லாக்கு, வைர மூக்குத்தி, வைர கழுத்தணி,  வைர நெத்திச்சுவடி, தங்கத் தாழம்பூ, மரகதத் திலகம், நீலக்கல் திலகம், வைர மார்புக்கவசம் உள்பட விலை மதிக்க முடியாத ஏராளமான வைரம், வைடூரிய நகைகளைக்  காணவில்லை. மேலும், மூல ஸ்தானத்தில் இருந்த 22 கிலோ தங்கத்தாலான மணி, விலை மதிக்க முடியாத வலம்புரி சங்கு ஆகியவையும் காணவில்லை. 1972ஆம்  ஆண்டு கோவில் சொத்துப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நகைகள் 1995ஆம் ஆண்டுப் பட்டியலில் இடம் பெறவில்லை.'' என பக்தர் ஒருவர் அளித்த முறையீடு குறித்து  விசாரித்த உயர்நீதிமன்றம் இது குறித்துப் பதில் அளிக்குமாறு அறநிலையத்துறைக்கு ஆணைப் பிறப்பித்துள்ளது.

 
ஹைட்ரோ கார்பன் அபாயம் நூல் வெளியீட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 15:02

கா. அய்யநாதன் எழுதிய "ஹைட்ரோகார்பன் அபாயம்' என்னும் நூல் வெளியீட்டு விழா 7&10&17 அன்று சென்னை உமாபதி அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். நீதிநாயகம் து.அரிபரந்தாமன் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

 
26 ஆண்டுகள் கழித்துப்பார்த்த நிலா! – பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 15:28

"பேரறிவாளன்'' இரண்டு தலைமுறைகள் உணர்வோடு உச்சரிக்கும் பெயர். 26 ஆண்டு சிறை வாழ்க்கை. அதாவது சுமார் பத்தாயிரம் இரவுகள், பத்தாயிரம் பகல்கள்!  ஒவ்வொரு நாளும் எத்தனை கொடூரமானதாய், நீளமானதாய் நகர்ந்திருக்கும்- 19 வயதில் இழுத்துச் செல்லப்பட்டவர் 45 வயதில் பரோலில் வெளி வந்திருக்கிறார். இந்த கால  இடைவெளியில் இங்கு எல்லாமே மாறிவிட்டது. 30 நாள் பரோல் எனும் தற்காலிக சுதந்திரத்தில் எதை அறியவும் புரியவும் முடியும்- எவ்வளவு அன்பைக் கொடுத்து,  எவ்வளவை எடுத்துக் கொள்வது- எவ்வளவு கதைகளை கேட்பது- எவ்வளவு கண்ணீரைத் தாங்கிக் கொள்வது-

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி வீட்டிற்கு வந்தார் பேரறிவாளன்.

 
நல்லகண்ணு மீது வழக்கு- அரசு தனக்குத்தானே தேடிக்கொண்ட அவமதிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 14:58

தமிழ்நாட்டின் மூத்தத் தலைவர்களில் ஒருவரும் எத்தகைய வேறுபாடும் இன்றி அனைத்துத் தமிழ் மக்களாலும் மதித்துப் போற்றப்படும் தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள்  உழவர்களின் போராட்டத்தைத் தொடக்கி வைத்தார் என்பதற்காக தமிழக அரசு அவர் மீது வழக்குத் தொடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 
«தொடக்கம்முன்81828384858687888990அடுத்ததுமுடிவு»

பக்கம் 90 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.