தென்செய்தி
கீழடி அகழ்வாராய்ச்சிக்கு மூடு விழா தமிழர் தொன்மையை மறைக்க முயற்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 14:35

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
கீழடியில் அகழ்வாராய்ச்சிக்காகத் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படுவதாக கிடைத்துள்ள செய்தி பேரதிர்ச்சியைத் தருகிறது.
சிவகங்கை மாவட்டம் வைகைக் கரை அருகே கீழடியில் 2015ஆம் ஆண்டு மத்திய தொல்லாய்வுத் துறையினால் தொடங்கப்பட்டு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரிகத்தின்  தடயங்கள் கண்டறியப்பட்டன. தமிழகத்தில் முதல் முதலாக நகர்ப்புற நாகரிகத்தின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்ட செய்தி உலகெங்கும் பெரு வியப்பை ஏற்படுத்திற்று.

 
தாஜ்மகாலைக் காணோம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 அக்டோபர் 2017 14:16

உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாஜ்மகால் குறித்த விவரங்களை உத்தரப்பிரதேச அரசு அடியோடு மறைத்துள்ளது. அரசின் சார்பில் வெளியிடப்பட்ட  சுற்றுலா சம்பந்தமான சிறு நூலில் தாஜ்மகால் பற்றிய குறிப்பையே காணோம்.

 
தமிழர்களின் 60 ஆண்டு காலக் கனவுத் திட்டமான குளச்சல் - இணையம் துறைமுகம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கானத் திட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 12:46

1. இந்தியாவில் உள்ள முக்கியத் துறைமுகங்கள் அனைத்தும் செயற்கைத் துறைமுகங்கள். குறிப்பிட்டக் கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் கடலுக்கு அடியில் அகழ்வுப் பணி செய்து ஆழப்படுத்த வேண்டும். 

2. 16 மீட்டர் மிதவை ஆழமுள்ள சரக்குப் பெட்டகக் கப்பல்களைக் கையாளும் நவீன துறைமுகங்கள் எதுவும் இந்தியாவில் இல்லை.

3. மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கிடையே கடல் போக்குவரத்து வழியில் இந்தியத் துறைமுகங்கள் எதுவும் இல்லை. சென்னை, தூத்துக்குடி, விசாகபட்டினம், கொச்சி, மும்பை, கல்கத்தா போன்ற பெருந் துறைமுகங்கள் இந்த கடல் வழியிலிருந்து தொலைவில் அமைந்துள்ளதால் சர்வதேச சரக்குக் கப்பல்கள் இத்துறைமுகங்களுக்கு வந்து செல்வதில்லை.

 
கல்வி உரிமை காக்கக் களபலியான அனிதா - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 12:52

பெற்ற தாயின் சாவைக்கூட புரிந்து கொள்ள முடியாத மழலை வயதில் சொல்லொண்ணாத சோகத்திற்கு ஆளானாள். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, சுமை தூக்கும் தொழிலாளியின் மகளாக வளர்ந்து, ஓட்டைக் குடிசையில் எளிய வாழ்வு வாழ்ந்தும், எப்படியேனும் படித்து, மருத்துவராக வேண்டும். மக்களுக்குத் தொண்டாற்றி மகிழ்ச்சி காண வேண்டும். என்ற கனவை இதயத்தில் தாங்கி தன்னம்பிக்கையோடு படித்தாள். உள்ளூர் பள்ளியில் 10ஆம் வகுப்பில் 500க்கு 478 மதிப்பெண்கள் பெற்ற அவளின் திறமையையும் விடா முயற்சியையும் கண்ட தனியார் மெட்ரிக் பள்ளி அவளைக் கட்டணமில்லாமல் தனது பள்ளியில் சேர்த்துக்கொண்டது. பள்ளி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை அவளும் நிறைவேற்றினாள். 12ஆம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றாள். அதாவது 98% பெற்று மாநிலத்தின் முதல் வரிசை மாணவிகளில் ஒருவளாகத் திகழ்ந்தாள். தமிழில் 195, ஆங்கிலத்தில் 188, கணிதத்தில் 200, இயற்பியலில் 200, வேதியலில் 199, உயிரியலில் 194 பெற்றாள். மருத்துவம் படிக்கத் தேவையான மதிப்பெண் 196.75 கிடைத்துவிட்டது. மருத்துவர் ஆகிவிட்டது போன்ற மகிழ்ச்சியில் மிதந்தாள். பெற்ற தந்தையும், உடன் பிறந்த சகோதரர்களும் தங்களது துயர வாழ்வின் முடிவு நெருங்கிவிட்டது போலக் கருதினார்கள்.

 
கூர் தீட்டப்படும் வாள்கள் - கவிஞர் தமித்தலட்சுமி PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 12:45

மந்திகள் கூட்டத்தில்
மலர் மாலையாய்
ஏன் நின்றாய்?

 
«தொடக்கம்முன்919293949596979899100அடுத்ததுமுடிவு»

பக்கம் 91 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.