|
தரமற்ற கல்வியால் தாழ்ந்த தமிழகம்! - பழ. நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:23 |
தமிழ்நாட்டில் 552 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலுக்காக 4 துறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7 கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாகும். 20 கல்லூரிகள் தன்னாட்சிக் கல்லூரிகளாகும். எஞ்சிய 495 கல்லூரிகள் சுயநிதிக் கல்லூரிகளாகும். பாலிடெக்னிக் கல்லூரிகள் 419, கட்டட வடிவமைப்புக் கல்லூரிகள் 21 உள்ளன.
|
கா. பரந்தாமன் நினைவேந்தல் |
|
|
|
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:45 |
தமிழர் தேசிய முன்னணியின் மூத்த பொதுச்செயலாளர் கா. பரந்தாமன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி 23-7-17 ஞாயிறு அன்று மதுரை பால்மீனாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. அனைவரையும் வெ.ந. கணேசன் வரவேற்றார். எம்.ஆர். மாணிக்கம் தலைமை தாங்கினார். திரு. சி.சி. சாமி, ஜி.எஸ். வீரப்பன், துரை. மதிவாணன், தி. பழனியாண்டி, சி. முருகசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கா. பரந்தாமன் படத்தினை பழ.நெடுமாறன் திறந்து வைத்து உரையாற்றினார்.
|
|
மருதுபாண்டியர் மூட்டிய தென்னாட்டுப் புரட்சி! |
|
|
|
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:50 |
இந்தியத் துணைக்கண்டத்தில் வணிகம் செய்து பிழைக்க வந்த ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனம் இந்நாட்டையே அடிமைப்படுத்தியது துயரமிக்க ஒரு வரலாறாகும். ஆங்கிலேயரின் படை வலிமைக்கு அஞ்சி இந்தியா முழுவதிலுமிருந்த மன்னர்களும், குறுநில மன்னர்களும் அடங்கி ஒடுங்கி இருந்த காலக்கட்டத்தில் - 1800-1801 ஆண்டுகளில் ஆங்கிலேயருக்கு எதிராக மூண்டெழுந்த "தென்னாட்டுப் புரட்சி' வரலாற்றில் மறைக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும்.
|
நூல் மதிப்புரை படித்தேன்! படியுங்கள்! |
|
|
|
புதன்கிழமை, 16 ஆகஸ்ட் 2017 16:41 |
"ஊரின் நடுவே அழகான குளம். தாமரையும் அல்லியும் பூத்துக் கிடக்கின்றன. பூக்களின் மீது வண்டுகளும், தேனீக்களும், தேன்சிட்டுகளும் ரீங்கரிக்கும். மீன் குஞ்சுகளைக் கவ்வ நீர்ப்பறவைகளும் வருகின்றன. குளத்தின் அழகு மனதைக் கவர்கிறது. ஆனால் நீரின் அடியில் கிடப்பது சகதியும் மலர்களின் தண்டுகளும்தான். இவை மலர்களின் அழகிற்கு ஆதாரம். குளத்தின் அடியிலுள்ள சேற்றை யாரும் விரும்புவதில்லை. அது மக்களுக்கு எந்தப் பயனும் தருவதில்லை. அந்த சேற்றைப் போன்றதுதான் என் வாழ்க்கை.'' என "லட்சுமி என்னும் பயணி' என்று எழிலுறத் தொடங்கும் இந் நூலில் நெகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் பல இடம்பெற்றுள்ளன.
|
|
|
|
|
பக்கம் 93 - மொத்தம் 132 இல் |