தமிழ்த் தேசியப் போராளி பரந்தாமன் திடீர் மறைவு! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:38 |
50 ஆண்டு காலமாக வானில் பறக்கும் பறவையின் நிழல் நிலத்தில் படிந்து மேடு, பள்ளங்களிலும் தொடர்வதைப்போல அடக்கு முறைகளிலும், சிறைவாசங்களிலும் இடை விடாது என்னைப் பின்தொடர்ந்த அருமைத் தோழர் கா. பரந்தாமன் திடீரென கடந்த 29-6-2017 அன்று மறைந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் என்னால் மீள முடியவில்லை.
பெருந்தலைவர் காமராசரின் தலைமையை ஏற்று இளைஞர் காங்கிரசில் மானாமதுரை பொறுப்பாளராக இருந்த காலம் முதல் அவர் மறையும் காலம் வரை என்றும் வற்றாது ஊற்றெடுக்கும் அன்போடு நட்புறவு கொண்டிருந்தார்.
|
|
பன்முகக் கலைஞர் வீர. சந்தானம் மறைவு |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:36 |
1983ஆம் ஆண்டில் இலங்கையில் கருப்பு சூலையில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் சூழ்ந்த நேரத்தில் ஓவியர் வீர. சந்தானம் என்னுடன் அறிமுகமானார். ஈழத் தமிழர் படுகொலை குறித்து அவர் தீட்டிய உயிரோவியங்கள் அடங்கிய கண்காட்சித் திறப்பு நிகழ்ச்சியில் பங்குபெறுமாறு அழைத்திருந்தார். அவர் வரைந்த ஓவியங்கள் கண்டோரைக் கண் கலங்க வைத்தன.
|
கதிராமங்கலம் மக்கள் பிரச்சனை... தமிழக அரசியலில் புதிய வரலாறு படைப்பு அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்று கூடி ஆதரவு! |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017 14:23 |
"கதிராமங்கலம் பிரச்சனையில் அனைத்துக்கட்சித் தலைவர்களையும் ஒன்றுபடுத்தி வரவழைத்த கதிராமங்கலம் மக்களை மனமாறப் பாராட்டுகிறேன். மாநில ஆளுங்கட்சி, மத்திய ஆளுங்கட்சி ஆகியவற்றைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சித் தலைவர்களும் கைகோர்த்து இம்மேடையில் தோன்றியுள்ளனர். தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் உருவாகி உள்ளது. அதற்கான பெருமை இம்மக்களையே சாரும்.
|
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மாநிலங்களின் உரிமைகளை மதிக்காத ஆளுநர்கள் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:27 |
இந்திய நாட்டின் அரசியல் சட்டம், குடியரசுத் தலைவர், ஆளுநர்கள் ஆகியோருக்குள்ள அதிகார எல்லைகளைத் திட்டவட்டமாக வரையறுத்துள்ளது. அதைப்போலவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையமைச்சர், மாநில முதலமைச்சர்கள் ஆகியோருக்குள்ள அதிகாரங்களையும், பொறுப்புகளையும் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறது.
|
"அமெரிக்கத் தமிழர் முன்னோடி!' பழநிக் குமணனுக்குப் பாராட்டு! வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு அளித்தது |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017 14:19 |
"அமெரிக்கத் தமிழர் முன்னோடி' என்ற பாராட்டை இதழியல் துறையில் மிகச்சிறந்த "புலிட்சர் விருது' பெற்ற நெ. பழநிக்குமணன் அவர்களுக்கு வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மினி யா பொலிசு நகரில் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஆண்டு மாநாடு சூன் 22ஆம் நாள் நடைபெற்ற போது இப்பாராட்டு வழங்கப்பெற்றது.
|
செவ்வாய்க்கிழமை, 25 ஜூலை 2017 14:22 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 95 - மொத்தம் 132 இல் |