தென்செய்தி
தமிழ் பக்தியின் மொழி - மா. க. ஈழவேந்தன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00

எங்கும் நிறைந்தவன் இறைவன். எல்லாம் வல்லவன் இறைவன் என்று பேசுகிறோம். அந்த கடவுளுக்கு தமிழ் தெரியுமா? என்று கேட்கும் நிலையில் இன்னும் சில தமிழர்கள் இருப்பதை எண்ணி ஏங்குகிறோம்.

செந்தமிழ் உடல் சிவநெறி உயிர் என்கிறோம். ஆனால் தமிழன் கட்டிய கோயில்களில் தமிழைக் காண்பது அரிதாக இருக்கிறது. திராவிடக் கட்டிடக்கலை , திராவிட சிற்பம், திராவிட ஓவியம் என்றெல்லாம் பெருமை பேசுகின்ற நாம் அதே கோயிலில் தமிழுக்கு இடம் இல்லையென்றால் இதன் பொருள் என்ன? கோயில் பெரிது. கோபுரம் பெரிது. சிவலிங்கம் பெரிது. நந்தி பெரிது. அக்கோயிலைக் கட்டிய மன்னனின் உள்ளமும் பெரிது என்று தஞ்சைப் பெருவுடையார் கோயிலைப் பெருமையோடு பேசுகிறோம். ஆனால் அங்கும் அரைகுறையாகத்தான் தமிழொலி கேட்கிறது.

 
மோடி யாழ்ப்பாணம் செல்ல வேண்டும் - பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00

புத்த மாநாட்டில் கலந்து கொள்ள கொழும்பு செல்லவிருக்கும் பிரதமர் மோடி யாழ்ப்பாணத்திற்கும் சென்று அங்குள்ள தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய வேண்டும். 2012ஆம் ஆண்டில் காமன்வெல்த் அதிபர்கள் மாநாடு நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் யாழ்ப்பாணம் சென்று தமிழர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து இலங்கை அதிபரிடம் தனது கண்டனத்தை நேரில் தெரிவித்தார்.

 
வைகை நாகரிகத்தை மறைக்க முயற்சி: மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பழ.நெடுமாறன், தா. பாண்டியன் மற்றும் தலைவர்கள் பங்கேற்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017 16:43

2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட வைகைக் கரை நாகரிகம் குறித்த அகழ்வாராய்ச்சிகளை தடுத்து நிறுத்த மத்திய பா.ச.க. அரசு செய்துவரும் முயற்சிகளுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மதுரையில் 10-4-2017 அன்று காலை 10 மணி அளவில் புதூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமை வகித்தார். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான தா. பாண்டியன் கலந்துகொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினார்.

 
தாய்த் தமிழை வாழவைப்போம் - பேரா. அறிவரசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 16 மே 2017 00:00

தோழர்காள்! தோழர்காள்! தூயநம் தாய்த்தமிழை
வாழவைப்போம் தாயகத்தில் வாருங்கள் தோழர்காள்!
ஆனாத பெருமைசேர் அன்னைத் தமிழ் மொழியின்
வாணாளைக் குறைக்கின்ற வஞ்சகரின் செயல்எண்ணிக்
கிளர்ந்து திரண்டெழுந்து கேடுநீக்க முயலாமல்
தளர்ந்து கிடத்தல் தகுமாமோ? நாளெல்லாம்

 
மு. பாலசுப்பிரமணியம் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017 16:41

தமிழர் தேசிய முன்னணயின் மூத்தத் துணைத் தலைவரும் கொங்கு மண்டல மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றவருமான மு. பாலசுப்பிரமணியம் காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம்.

செவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017 16:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்919293949596979899100அடுத்ததுமுடிவு»

பக்கம் 99 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.