|
தண்ணீரை முற்றிலுமாகத் தடுப்பதே நோக்கம் - பழ. நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:40 |
"பொது மேற்பார்வைக் குழுவின் கட்டுப்பாட்டிலும், தமிழகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் கருநாடக அரசு புதிய அணை கட்டிக்கொள்ளலாம், அணைப் பராமரிப்பு, நீர் திறப்பு உள்ளிட்டவற்றை பொது மேற்பார்வைக் குழுவே செய்ய வேண்டும்'' என உச்சநீதிமன்றம் 17-8-2017 அன்று தெரிவித்துள்ள கருத்து தமிழ்நாட்டு விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பல்வேறு கட்சித் தலைவர்களும் விவசாய சங்கங்களின் தலைவர்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இக்கருத்தைத் தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு காவிரிப் பிரச்சினையின் கடந்த கால வரலாற்றினை தமிழகம் சார்பில் வாதாடியவர்கள் சரிவர எடுத்துச்சொல்லவில்லை என்பது இதன்மூலம் தெரிகிறது.
|
திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017 12:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
"நெடுமாறன் தொடுத்த வழக்குகள் ஒன்றில்கூட தோற்றதில்லை'' நீதிநாயகம் கே. சந்துரு பாராட்டு |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:32 |
தமிழ்க்குலம் பதிப்பாலயம் வெளியிட்ட "உரிமைகளை நிலை நிறுத்திய உன்னதத் தீர்ப்புகள்' நூல் வெளியீட்டு விழா. 06--08--2017 - ஞாயிறு அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு நீதிநாயகம் கே. சந்துரு அவர்கள் தலைமையேற்றார். பேரா. கல்விமணி அவர்கள் நூலை வெளியிட்டார். திருவாளர்கள் என். சந்திரசேகரன், பெ. மணியரசன், எம்.வி.கே. நிசாமுதீன், வழக்கறிஞர் ச. செளந்திரபாண்டியன், மரு.அ. தாயப்பன் ஆகியோர் உரையாற்றினர். மொழி பெயர்த்த திருவாட்டி தமித்தலட்சுமி ஏற்புரையாற்றினார். திரு. பழ. நெடுமாறன் அவர்கள் சிறப்புரையாற்றினார். திரு. பா. இறையெழிலன் நன்றி நவின்றார்.
|
|
கதிராமங்கலம் போராளிகள் பிணையில் விடுதலை |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:36 |
கதிராமங்கலம் காக்கப் போராடியதற்காகப் பொய் வழக்குகள் புனையப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச் சுடர் மற்றும் கதிராமங்கலம் தோழர்கள் கா. தருமராசன், இரா. முருகன், சு. சிலம்பரசன், ரெ. செந்தில்குமார், சே. சந்தோஷ், ப. சாமிநாதன், கோ. ரமேஷ், இரா. வெங்கட்ராமன் ஆகிய 10 தோழர்கள் 11-08-2017 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
|
திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017 12:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
பேராசிரியர் கல்விமணியின் தன்னலமற்ற தொண்டு |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 செப்டம்பர் 2017 12:31 |
பேராசிரியர் கல்விமணி அவர்கள் தன்னை முழுமையாக மக்கள் தொண்டிற்காக அர்ப்பணித்துக்கொண்டவர். குறிப்பாக பழங்குடி மக்களின் உயர்வுக்காக அயராது தொண்டாற்றி வருபவர். அவர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் தகர்த்து அவருடைய தொண்டு தொடர்வதற்கு துணைபுரிந்த பெருமை மதிப்பிற்குரிய கே. சந்துரு அவர்களைச் சாரும்.
|
|
|
|
|
பக்கம் 92 - மொத்தம் 132 இல் |