அன்னையைக் கவனிப்பாரில்லை! |
|
|
|
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:23 |
காமராசர் முதலமைச்சரான பிறகு ஒருமுறை அன்னை சிவகாமி அவரைக் காண சென்னைக்கு வந்தார்கள் சென்னையில் உறவினர் வீட்டில் தங்கினார்கள். அங்கேதான் சாப்பிட்டார்கள். அவர்களுடைய காரிலேயே அந்தக் குடும்பத்தாருடன் ஏறிக்கொண்டு காமராசரைக் காண வந்தார்கள். ஆனால், காமராசர் வழக்கம் போல் வீட்டில் இல்லை.
அன்னை அவர்கள் மகனைக் காண ஆவலோடு எப்பொழுது வந்தாலும் அவர் வீட்டில் இருப்பது அபூர்வம்தான். வழக்கம்போல் அன்றும் அவர் வீட்டில் இல்லை சமையற்காரர் வைரவன் வந்த விருந்தாளிகளுக்கு காப்பிகூட கொடுக்கவில்லை. தன் மகனைக் காண தன்னுடனே வந்திருந்த விருந்தாளிகளுக்கு தன்னுடைய மகன் வீட்டிலேயே அதுவும் முதலமைச்சராக இருக்கும் போதே எவ்விதமான உபசாரமும் இல்லாததைக் கண்டு அன்னை சிவகாமியின் கண்களில் கண்ணீர் மல்கிற்று!
|
சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
இலங்கை கிழக்கு மாகாணத்தில் எழுக தமிழ் பேரணி |
|
|
|
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:21 |
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் வேட்கை மற்றும் அவர்கள் சார்ந்த சில கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் என்ற மகுடத்திலான 2வது பேரணியில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள் கலந்து கொண்டனர். சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ''எழுக தமிழ்' முதலாவது பேரணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் தேதி வட மாகாணம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
|
சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை |
|
|
|
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00 |
சல்லிக்கட்டு நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துத் தமிழக மாணவர்கள் ஒற்றுமையுடனும், கட்டுப்பாட்டுடனும், அமைதியாகவும், யாருக்கும் எவ்வித இடையூறில்லாமலும் ஒருவார காலமாக நடத்திய போராட்டம் மக்களின் பேராதரவைப் பெற்றது.
|
சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட மணவை முஸ்தபா - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017 14:17 |
"புத்தம் புதிய கலைகள் – பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே – அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. சொல்லவுங் கூடுவ தில்லை – அவை சொல்லுந் திறமை தமிழ்க் கில்லை! மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்'' என்றந்தப் பேதை உரைத்தான் – ஆ இந்த வசை எனக்கு எய்திடலாமோ'' என தமிழ்த்தாய் மனம்நொந்து கூறுவதாகப் பாரதி பாடி வருந்தினான். தமிழுக்கு ஏற்பட்ட இந்த வசையை நீக்க உறுதிபூண்டு தொண்டாற்றி வெற்றிகண்ட பெருமைக்குரிய அறிவியல் தமிழின் தந்தை அறிஞர் மணவை முஸ்தபா மறைந்த செய்தி தமிழ்கூறும் நல்லுலகைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
|
சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
மாணவர்களைக் கைது செய்வதை நிறுத்துக! முதலமைச்சருக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
புதன்கிழமை, 01 பெப்ரவரி 2017 00:00 |
தமிழக மாணவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று சல்லிக்கட்டு விளையாட்டிற்காக நடத்திய அறவழிப் போராட்டம் உலகமே வியந்து பாராட்டும் வகையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
|
சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 104 - மொத்தம் 132 இல் |