தென்செய்தி
ஆங்கிலக் கல்வி PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016 12:10

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
பாரில் நல்இசைப் பாண்டிய சோழர்கள்
பார் அளித்ததும் தர்மம் வளர்த்ததும்

 
மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை : முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு 30 ஆயிரம் வழங்கியது! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 17:19

பல்லவபுரம் மறைமலையடிகள் இல்லத்தில் 25--9--2016 அன்று மாலையில் நடைபெற்ற மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. வரவேற்புரை: ம.ம.அ.க. அறக்கட்டளை அறங்காவலர் மறை.தி.தாயுமானவன் பேசுகையில்...

 
திரைப்படங்களில் தமிழைக் கொலை செய்கிறார்கள் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் நேர்காணல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 17:10

திரைப்படத்திற்குத் தமிழில் பெயர் வைத்தால்கூட கேளிக்கை வரிச்சலுகை கிடைக்கிறது. தமிழில் படிப்பது மட்டும் கேலிக்கூத்தாகி விடுகிறதே ஏன்...? - கதிர் தியாகு, விருத்தாசலம்

தமிழ்நாட்டு அரசியலிலும், சமுதாயத்திலும், திரைப்படங்களின் தாக்கம் மிதமிஞ்சி இருக்கிறது. அந்த அளவிற்கு தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு போன்றவை மதிக்கப்படுவதில்லை. எனவேதான் அரசுகள் தங்களது செல்லப்பிள்ளையாக திரைப்படத் துறையைக் கருதி, ஊட்டி வளர்க்கின்றன. தமிழில் பெயர் வைக்கப்பட்ட திரைப்படங்களில், கலப்புத் தமிழில் உரையாடல், தமிழிசைப் புறக்கணிக்கப்பட்டு பிறமொழி இசைக்கு முதன்மை, தமிழ்ப்பண்பாட்டிற்கு எதிரான நடை, உடை, ஆகமொத்தத்தில் தமிழ்த் திரைப்படங்களில் தமிழ்க் கொலை நடைபெறுகிறது. அதைப்பற்றிக் கவலைப்படாமல் பெயரில் மட்டும் தமிழ் இருந்தால் போதுமென அரசுகள் கருதுகின்றன.

 
புதுவை ந.மு. தமிழ்மணி விடுதலை ஏழரை ஆண்டு காலம் நடைபெற்ற பொய் வழக்கு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 17:16

புதுச்சேரி தமிழன்பர்கள் பலரும் தங்கள் இரு சக்கர வண்டிகளில் ஒரு பலகையில் தமிழ் எண்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இப்படித் தமிழ் எண்களைப் பயன்படுத்தக்கூடாது என்று தன்னுடைய நிறுவனத்தின் தொலைக்காட்சி வழியாக காங்கிரசுக் கட்சியின் இப்போதைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகிய திரு. ஜான்குமார், சில ஆண்டுகளுக்கு முன்பு விளம்பரம் செய்து வந்தார். இதை எதிர்த்து தமிழ் அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 
ஒற்றெழுத்தின் சிறப்பு! குடந்தை வய்.மு. கும்பலிங்கன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 17:04

தமிழுக்கே உள்ள தனிச்சிறப்பு ஒற்றெழுத்தாகும். மேற்குமொழிகள் அனைத்திலும் இவ்வகையான ஒற்றெழுத்துகள் கிடையாது. பிற மொழிகளில் சொல்லும் சொல்லும் சேர்ந்தால் சொற்றொடர் அமைந்துவிடும். தமிழில் மட்டுமே சொல்லும் சொல்லும் இணையும்போது இடையிலே ஒற்றெழுத்து சேரும் - அமையும் - கூடும். இதை நான் பசை எழுத்து என்றும், ஒட்டு எழுத்து என்றும் சொல்லுவேன். ஒற்று வந்தால் ஒரு பொருள், ஒற்று வரவிலை எனில் பிறிதொரு பொருள் என அமையும். ஒற்றால் விளையும் அந்தச் சொல் வேறுபாட்டை - பொருள் வேறுபாட்டை இங்குப் பார்ப்போம்

வியாழக்கிழமை, 03 நவம்பர் 2016 17:26 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 110 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.